மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்!
புதுடில்லி, செப். 23- மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் மாற்றங்கள் உடனே செய்யப் படவேண்டும் எனவும், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் ஏன் மாற்றம் செய்ய முடியாது? என்றும் மசோதாவை பெயர ளவில் வைத்துக் கொண்டு இழுத்தடிக்க நோக்கமா? என வும், மாநிலங்களவையில் காங் கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பினார்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் மாற்றங்கள் செய்யப்பட்டு, அதனை உடன டியாக அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலி யுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளி ருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா மக்கள வையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்கள வையில் தாக்கல் செய்யப்பட்ட போது அதில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத் தினார்.
பஞ்சாயத்து ராஜ், ஜில்லா பஞ்சாயத்து மசோதாக்களில் மாற்றங்கள் செய்யப்படும் போது, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் ஏன் மாற்றம் செய்ய முடியாது? என்றும், மகளிர் இடஒதுக்கீடு மசோ தாவை பெயரளவில் வைத்துக் கொண்டு இழுத்தடிக்க நோக் கமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
33% இடஒதுக்கீடு மசோ தாவில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் எனவும், அதனை இப்போதே செய்யவேண்டும் எனவும் மல்லிகார்ஜூன கார்கே வலி யுறுத்தினார்.