சென்னை, மார்ச்.29- தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி என். பி.எஸ்.சி.) சார்பில் 95 காலிபணியிடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப்-1 பதவிகளுக்கான நேர்முகத் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு இருக்கிறது.
துணை ஆட்சியர், கூட்டுறவு சங்கதுணைப் பதிவாளர், துணை காவல் துறை துணைக் கண் காணிப்பாளர் வணிக வரித்துறை உதவி ஆணை யர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் உள் ளிட்ட குரூப்-1 பதவிகளில் வரும் 95காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யம் (டி என். பி.எஸ்.சி.) கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியிட்டது.
இந்த பணியிடங்களுக்கு முதல்நிலை. முதன்மை மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதி யானவர்கள் தேர்வு செய் யப்படுவார்கள். அந்த வகையில் இந்த காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக் கான முதல்நிலைத் தேர்வு கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதி நடந்தது. இந்த தேர்வை தமிழ்நாடு முழு வதும் 1 லட்சத்து 90 ஆயி ரம் பட்டதாரிகள் எழுதினார்கள்.
இதற்கான முதல் நிலைத் தேர்வு முடிவு கடந்த ஆண்டு (2023) ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி வெளியானது. முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக முதன்மைத் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 10- ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நடந்தது. முதல் நிலைத் தேர்வில் தேச்சி பெற்ற 2,113 பட்டதாரிகள் இந்த முதன் மைத் தேர்வை எழுதியதாக சொல்லப் பட்டது.
முதன்மைத்தேர்வு முடிவை டி.என்.பி.எஸ்.சி கடந்த 6-ஆம் தேதி வெளியிட்டது. அதில் வெற்றி பெற்ற 105 பெண் தேர்வர்கள் உள்ளிட்ட 198 பேரின் பட்டியலையும் டி.என்.பி.எஸ்.சி. அறிவித்து இருந்தது. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக் கான நேர்முகத் தேர்வு கடந்த 26-ஆம் தேதி முதல் நேற்று (28.3.2024) வரை சென்னை டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத் தில் நடந்தது.
இந்த நிலையில் முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப் படையில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்ணை கொண்டு தேர்வு முடிவு நேற்று இரவு வெளியிடப்பட்டது. முதன் மைத்தேர்வில் வெற்றி பெற்ற 198பேரில் 197 பேரின் மதிப்பெண்கள் அதில் இடம் பெற்று இருந்தன. இதில் 580 மதிப்பெண் பெற்ற ஆண் தேர்வர் முதல் இடத்தை பெற்றுள்ளார்.
அதற்கடுத்தபடியாக 579.75 மதிப்பெண், 574 மதிப்பெண்களுடன் பெண் தேர்வர்கள் 2 மற்றும் 3ஆவது இடத்தை பிடித்து இருக்கின்றனர்.