தேர்தல் விதிமீறல் -1,383 புகார்கள் : தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

2 Min Read

சென்னை, மார்ச் 29 சி-விஜில் செயலி மூலம் இதுவரை 1,383 புகார்கள் பெறப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னையில் செய்தி யாளர்களிடம் அவர் நேற்று (28.3.2024) கூறியதாவது: தமிழ் நாட்டைச் சேர்ந்த 21,229 பேரிடம் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் உள்ளன. தேர்தல் அறிவிக்கப்பட்டால் அருகில் உள்ள காவல்நிலையங்களில் அந்த துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண் டும். ஆனால், இதுவரை 568 பேர் ஒப்படைக்கவில்லை. ஒருவேளை, அவர்கள் வெளிநாடுகளில் இருக்க லாம். அல்லது வேறு காரணங்கள் இருக்கலாம். இங்கு சட்டம் – ஒழுங்கு சரியாக இருப்பதால், பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இல்லை.
நடத்தை விதிமீறல் உட்பட தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க ‘சி-விஜில்’ செயலியை பொதுமக்கள் பயன்படுத்தலாம். நிகழ் நேர காணொலி அல்லது ஒளிப் படத்தை அனுப்பினால், அந்த ஆதா ரம் அடிப்படையில், 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை, இந்த செயலி மூலம் 1,383 புகார்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்களுக்கு சின்னம்: வேட்புமனு நிராகரிப்பை பொறுத்த வரை, அதற்கான பிரத்யேக கார ணங்களை தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது. ஒரு வேட்பாளர் பெயர் வாக்காளர்பட்டியலில் 2 இடங்களில் இருக்கும்பட்சத்தில், தேர்தல் ஆணைய விதிகளின்படி முடிவெடுக்கும் அதி காரம் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு மட்டுமே உள்ளது. மார்ச் 29ஆ-ம் தேதி (இன்று) புனித வெள்ளி, பொது விடு முறை தினம் என்பதால், வேட்பு மனுக்களை திரும்பப் பெற இயலாது. மனுக்களை திரும்பப் பெற 30-ம் தேதி மாலை 3 மணி வரை அவகாசம் உள் ளது. அதன்பிறகு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அப் போது வேட்பாளர்களுக்கான சின் னம் ஒதுக்கப்படும்.
100 நாள் வேலை திட்டத்துக்கான ஊதியத்தை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது தொடர்பாக எந்த தகவலும் இல்லை. ஒரு வேளை மத்திய அரசு இதற்கு அனுமதி பெற்றி ருக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *