மதுரை, செப்.23- சிறு, குறு தொழில் முனைவோர்கள் மற்றும் வணிக வாடிக்கையாளர்களுக்கான, (மெய்நிகர் கிரெடிட்டை) வழங்க, உடனடிக் கடன் வசதி அமேசான் பே லேட்டர் உடன் அதன் ஒருங் கிணைப்பை அமேசான் பிசினஸ் நிறுவனம் அறிமுகப் படுத்தி உள்ளது.
2023-2024ஆம் ஆண்டின் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவன துறைக் கான கடன் உத்தரவாதத் திட்டத்தை மறு சீரமைப்பதற்கான இந்திய அரசாங் கத்தின் நோக்கம், அந்த அமைப்புகள் தங்கள் செயல்பாடுகளை, அளவிடுவ தற்கு கடன் கிடைப்பதன் அவ சியத்தை எடுத்துரைத்தது.
அதன்படி தகுதியான வாடிக்கையா ளர்களுக்கு விர்ச்சுவல் கிரெடிட்டை (கடன்) வழங்க அமேசான் பே லேட்டர் (உடன டிக் கடன் சேவை) உடனான இந்த ஒருங்கி ணைப்பு, நாடு முழுவதும் உள்ள வணிக வாடிக்கையாளர்களை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கத்தை அமேசான் பிசி னஸ் நிறுவனம் முன் னெடுத்துச் செல் லும் என இந்நிறுவனத் தின் இயக்குநர் சுசித் சுபாஸ் தெரிவித்துள்ளார்.