முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
சென்னை, செப். 23- கிராமங்களில் பணப் புழக்கம் அதிகமாகி இருக் கிறது என முகநூலில் வந்த கருத்தை சுட்டிக்காட்டி மாநில திட்டக்குழு கூட்டத்தில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மாநில திட்டக்குழுவின் 4ஆவது கூட்டம் அதன் தலைவ ரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டா லின் தலைமையில் சென்னை தலை மைச் செயலகத்தில் நடந்தது. கூட்டத் தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
இந்த ஆட்சி செல்ல வேண்டிய பாதையையும், செல்லும் பாதை சரியானது தானா? என்பதையும் அறிவுறுத்தும் அமைப்பாக திட்டக் குழு மிக சிறப்பாக செயல்பட்டு வரு கிறது. முக்கிய கொள்கைகளை வகுப்ப தற்கு திட்டக்குழு முனைப்புடன் வழிகாட்டி வருகிறது. அரசுக்கும்-மக்களுக்கும் இடைவெளி ஏற் பட்டுவிடாமல் அனைவருக்கும் அனைத்தும் கிடைப்பதற்கு திட் டக்குழு பணியாற்றி வருகிறது. சில முக்கியமான கொள்கைகளை வகுக்கும் பணி திட்டக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மின் வாகன கொள்கை, தொழில் -4.0 கொள்கை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவ னங்கள் கொள்கை, துணி நூல் கொள்கை, கைத்தறிக் கொள்கை, சுற்றுலா கொள்கை, தமிழ்நாடு மருத்துவ உரிமை கொள்கை, தமிழ் நாடு பாலின மாறுபாடு உடையோருக் கான நலக் கொள்கை ஆகியவற்றைத் தயாரித்து வழங்கி இருக்கிறீர்கள்.
கழிவு மேலாண்மை கொள்கை, தமிழ்நாட்டின் நிலையான நிலப் பயன்பாட்டுக் கொள்கை, நீர்வள ஆதாரக் கொள்கை, வேலை வாய்ப்பு மற்றும் திறன் கொள்கை, வீட்டு வசதிக் கொள்கை போன்ற வற்றையும் விரைந்து இறுதி செய் திட வேண்டும். அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மக்களுக்கு எந்த வகையில் பயனளித்து வருகிறது என்பது தொடர்பாக நீங்கள் தரும் ஆய்வறிக்கைகளை தான் நான் மிக முக்கியமாக கருதுகிறேன்.
அரசுத் திட்டங்களை இன்னும் எப்படி செழுமைப்படுத்தலாம் என ஆலோசனைகளை, பரிந்துரை களை வழங்க வேண்டும். இப்போது மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கி வருகிறோம். ஒவ்வொரு மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் கிடைப்பது எத்தகைய மகிழ்ச்சியை வழங்கி வருகிறது என்பதை ஊடகங்களில் வரும் செய்திகள் மூலமாக அறிகிறேன். அனைத்து ஊடகங்களும் பெண் களிடம் பேட்டிகள் எடுத்து வெளி யிட்டு வருகிறார்கள். பேட்டி அளிக்கும் அனைவரும் மகிழ்ச்சியு டன்தான் பேட்டி தருகிறார்கள்.
கிராமத்தில் பணப்புழக்கம்
‘எங்கள் கிராமத்தில் 300 பெண் களுக்கு ஆயிரம் ரூபாய் வந் துள்ளது. அப்படியானால் எங்கள் கிராமத்திற்குள் 3 லட்சம் ரூபாய் வந்துள்ளது. 3 லட்சம் ரூபாய் எங்கள் கிராமத்திற்குள் வந்திருப் பதன் மூலமாக எங்கள் கிராமத்தில் பணப்புழக்கம் அதிகமாகி இருக் கிறது. எங்கள் கிராமத்து வளர்ச் சிக்காக 3 லட்சம் ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது’ என முக நூலில் ஒருவர் எழுதி இருக்கிறார். கிராமப்புற ஆய்வில் ஆர்வம் கொண்ட துணை தலைவர் ஜெயரஞ்சன், இப் படி பல கோணங்களிலும் ஆராய்ந்து ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட் டம்’ சமூகத்தில் ஏற்படுத்துகிற தாக்கம் குறித்து அறிக்கைகள் கொடுக்கலாம். மேலும் 2 முக்கிய மான வேண்டுகோளை வைக்கி றேன். அதாவது பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறை, மதிப்பீடு மற்றும் ஆய்வுத் துறை ஆகியவற்றை இணைத்து கொண்டு மாநில திட் டக் குழு செயல்படவேண்டும்.
இந்த ஒருங்கிணைப்பு மிக மிக அவசியம். பல்வேறு ஆலோசனை கள் திட்டக்குழுவால் வழங்கப்படு கிறது. இவற்றை அரசு துறைகள் முழுமையாகவும், சரியாகவும் பயன் படுத்துகிறதா, பின்பற்றுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும். புள்ளி விவரங்களாக மட்டுமல்ல, கள ஆய்வுகளின் மூலமாகவும் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு, மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செய லாளர் முதலமைச்சரின் செய லாளர் நா.முருகானந்தம், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் கே.கோபால், நிதித்துறை செய லாளர் (செலவினம்) எஸ்.நாக ராஜன் மற்றும் மாநில திட்டக்குழு உறுப்பினர்கள், அரசு உயர் அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.