தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் முடிந்தது – வேட்பு மனுக்களின் எண்ணிக்கை 1,749

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 28- நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், தமிழ் நாட்டை பொறுத்தவரை முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்த வரை தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க தலை மையில் ஒரு கூட்டணியும், பா.ஜனதா தலைமையில் மற் றொரு கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் இந்த தேர்தலில் களம் இறங்கியுள்ளன.

தொகுதிப் பங்கீடு, வேட்பா ளர் தேர்வு என பலகட்டப் பணிகளை பக்குவமாக முடித்த தலைவர்கள், தற்போது சூறா வளி சுற்றுப்பயணம் செய்து தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தொடங்கி விட்டனர்.

ஜனநாயக திருவிழாவான நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. கட்சி வேட்பாளர்களும், சுயேச் சைகளும் போட்டிப் போட்டுக் கொண்டு தங்களது மனுக்களை தேர்தல் அலுவலகங்களில் தாக்கல் செய்தனர். ஆட்டம், பாட்டம், வாண வேடிக்கைகளு டன் ஊர்வலமாக சென்று அவர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

இதில் பங்குனி உத்திர தினமான கடந்த 25ஆம் தேதி மிகவும் நல்லநாளாம். அன்று அ.தி.மு.க. வேட்பாளர்கள் 33 பேரும் தங்களது மனுக்களை தாக்கல் செய்தனர். இதேபோல் தி.மு.க., பா.ஜனதா, நாம் தமி ழர் கட்சி வேட்பாளர்களும் அதே நாளில் வேட்புமனு தாக் கல் செய்திருந்தனர். அன்று மட்டும் ஒரே நாளில் 403 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந் தனர்.
26.3.2024 அன்றும் வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில் வேட்புமனு தாக்கல் நேற்று டன் (27.3.2024) முடிந்தது. இத னால் தேர்தல் அலுவலகங்க ளில் காலை முதல் பிற்பகல் 3 மணி வரை ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா, பா.ம.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் வேட்பு மனுக்களை அதிகாரி களிடம் கொடுத்தனர்.
சில இடங்களில் 3 மணிக்கு பிறகு வந்தவர்களுக்கு ‘டோக் கன்’ வழங்கப்பட்டது. அவர் கள் ஒருவர் பின் ஒருவராக அனுமதிக்கப்பட்டு மனு தாக் கல் செய்ய அனுமதிக்கப்பட் டனர்.
கடைசி நாளான நேற்று பல்வேறு கட்சிகளின் முக்கிய வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 31 மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டு உள்ளன.

தென் சென்னையில் 28 மனுக்களும், மத்திய சென்னை யில் 22 மனுக்களும், வட சென்னையில் 31 மனுக்களும் தாக்கல் ஆகியுள்ளது.
இவ்வாறு தமிழ்நாடு முழு வதும் உள்ள 39 தொகுதிகளிலும் 1,749 மனுக்கள் தாக்கல் செய் யப்பட்டு உள்ளன. கடைசி நாளில் சுயேச்சைகளே அதிக அளவில் மனு தாக்கல் செய்து உள்ளனர்.
நாடாளுமன்ற தேர்த லோடு சேர்த்து குமரி மாவட் டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட 18 மனுக்கள் தாக் கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில் வேட்புமனுக் கள் மீது இன்று (28.3.2024) பரிசீலனை நடைபெறுகிறது. அந்தந்த தொகுதிகளுக்கு நிய மிக்கப்பட்டுள்ள பொதுப் பார்வையாளர்கள் முன்னிலை யில் இந்த வேட்புமனுக்கள் பரிசீலனை நடக்கிறது.

முறையாக கையெழுத்து போடப்படாத, ஆவணங்கள் இணைக்கப்படாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும்.
மனுக்களை திரும்பப் பெற விரும்புகிறவர்கள் 30ஆம் தேதிக்குள் திரும்பப் பெற வேண்டும்.

அதன் பின்னர் அன்றைய நாள் மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *