என்ன சம்பந்தம்?
மகன்: சிதம்பரம் நடராஜர் கோவிலை புராதன சின்னமாக அறி விக்க வில்லை என்று உயர்நீதிமன்றத்தில் தொல்லியல் துறை தகவல் தெரிவித்துள்ளதே, அப்பா!
அப்பா: புராணத்திற்கும் – புராதனத்துக்கும் என்ன சம்பந்தம், மகனே?
***
அவர்களின் புத்தி, யுக்தி…!
மகன்: மக்களவைத் தேர்தலுக்குப் பின் பி.ஜே.பி. அல்லாத மாநில ஆட்சிகளைக் கவிழ்ப்போம் என்று பி.ஜே.பி. மிரட்டல் என்று செய்தி வந்துள்ளதே, அப்பா!
அப்பா: மிரட்டலும், உருட்டலும்தானே அவர்களின் புத்தி, யுக்தி, மகனே?
***
அடிப்படை விதி தெரியாதவர்!
மகன்: அரசியலையும், ஆன்மிகத்தையும் பிரித்துப் பார்க்கக் கூடாது என்று பி.ஜே.பி. அண்ணாமலை கூறி யிருக்கிறாரே, அப்பா!
அப்பா: தேர்தலில் மத அடிப்படையில் பிரச்சாரம் செய்யக்கூடாது என்ற விதிகூட தெரியாதவர்தான் தமிழ்நாட்டின் பி.ஜே.பி. தலைவர் என்பது தெரிகிறது, மகனே?
அப்பா – மகன்
Leave a Comment