சென்னை,மார்ச் 27- 2024 மக்க ளவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்குரைஞர் ஆர்.சுதா வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணியில் தமிழ் நாட்டில் 9 மக்களவைத் தொகு திகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இதில் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, கரூர், கடலூர், சிவ கங்கை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 7 தொகுதிகளுக்கான வேட் பாளர்கள் ஏற்கெனவே அறிவிக் கப்பட்டு விட்டனர். தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 25) அன்று நெல்லை தொகுதிக்கான வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். இந்த சூழலில் மயிலாடுதுறை தொகுதிக்கான காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஆர்.சுதா அறிவிக் கப்பட்டுள்ளார்.
இன்று (27.3.2024) தமிழ் நாட்டில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்ய கடைசி நாளாக இருக்கும் சூழலில் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது குறிப் பிடத்தக்கது
மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட பிரவீன் சக்கரவர்த்தி, மணி சங்கர் அய்யர், செல்லக்குமார் மற்றும் சுதா ஆகியோரது பெயர் பரிசீலனையில் இருந்தது. இறுதி யில் கட்சித் தலைமையின் சார்பில் சுதா வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைப் பயணம் முழுவதும் வழக்குரைஞர் சுதா நடந்து சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறையின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வழக்குரைஞர் சுதா அவர்கள் வெற்றி பெற வாழ்த்துகள்! இந்தியா கூட்டணி நிச்சயம் வென்று டில்லியில் ஆட்சி அமைக்கும்! தமிழ் நாட்டில் 40 க்கு 40 ம் நமதே!