கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

27.3.2024

டெக்கான் கிரானிக்கல், சென்னை:
♦ தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் பற்றி அக்கறை கொண்ட கட்சி திமுக. பாஜக மோடி ஆட்சியில் கடந்த பத்தாண்டுகளில் தமிழ் நாட்டிற்கு செய்த நன்மை என்ன? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் பேச்சு.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
♦ அரவிந்த் கெஜரிவால் கைதைக் கண்டித்து பிரதமர் மோடி இல்லம் நோக்கி ஆம் ஆத்மி கட்சியினர் போராட் டப் பேரணி; ஆயிரக்கணக்கானோர் கைது.
♦இந்தியாவிற்கு மோடி மிகப் பெரும் ஆபத்து என் கிறார் டி.ஆர்.எஸ். கட்சியின் மூத்த தலைவர் கே.டி.ராமராவ்
♦ மாநிலத்திற்கு தர வேண்டிய நிதியை மோடி அரசு மறுக்கிறது. மக்களவை தேர்தலில் மாநிலத்தில் 14 இடங் களில் காங்கிரஸ் வெற்றி பெறும், தெலங்கானா முதல மைச்சர் ரேவந்த் நம்பிக்கை.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦திமுக கூட்டணியில் தமிழ்நாட்டில் 9 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றிய ஆர்.சுதா மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார்

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ நீட் தேர்வுக்காக ராஜஸ்தான் கோட்டா நகரில் பயிற்சியில் ஈடுபட்ட மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், ஜனவரி முதல் இப்போது வரை பயிற்சி மாணவர் ஆறாவது தற்கொலை இது.

தி ஹிந்து:
♦ ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட இந்திய மக்கள் பாஜக அரசை தூக்கி எறிவார்கள்: கனிமொழி பேட்டி.
♦ மோடி ஆட்சியில் தொழிலாளி வர்க்கம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. உண்மையான ஊதியத்தில் வீழ்ச்சி, ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ’10 ஆண்டு கால அநீதி’ என தொழிலாளிகளுக்கு எதிராக மோடி அரசு செயல்பட்டுள்ளது என காங்கிரஸ் குற்றச்சாட்டு.
♦ ஜே.என்.யு. மாணவர் தேர்தலில் அய்க்கிய இடதுசாரி குழு வேட்பாளர்கள் வெற்றி. தனஞ்சய் தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 27 ஆண்டுகளில் பதவி வகிக்கும் முதல் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளர் இவர். பத்தாண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பிர்சா அம்பேத்கர் புலே மாணவர் சங்கத்தின் (பாப்சா) அமைப் பின் சார்பில் மற்றொரு தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளர் பிரியன்ஷி ஆர்யா பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக் கப்பட்டார்

தி டெலிகிராப்:
♦ அம்மாவின் மடிக்கு தான் மீண்டும் வந்துள்ளதாக பேட்டி.- சட்டவிரோத சுரங்க வழக்கில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சுரங்க அதிபர் ஜி. ஜனார்த்தன ரெட்டி மீண்டும் பாஜகவில் இணைந்தார்.
♦ பஞ்சாபில் பாஜகவுடன் கூட்டணி இல்லை. சிரோ மணி அகாலி தளம் முடிவு. பாஜக தனித்து விடப்பட்டது. விவசாயி பிரச்சினை, ராமன் கோவில் பெயரில் ஹிந்துத்வா முன்னெடுப்பு இவைகள், பாஜகவை கழட்டி விட காரணம்.
♦ நரேந்திர மோடி அரசாங்கத்தின் தொடர்ச்சியான கொள்கை விமர்சகரான யாமினி, “நரேந்திர மோடியின் கீழ் இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட சேதம்” என்ற தலைப்பில் தி எகனாமிஸ்ட் பத்திரிகையில் ஒரு கடுமை யான கட்டுரையை மார்ச் 23இல் வெளியிட்டார். தற்போது டில்லியைச் சேர்ந்த கொள்கை ஆராய்ச்சி மய்யத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யரின் மகள் யாமினி ஆவார்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *