படிப்பு என்றாலே மக்களை அறிவுடையவர்களாக, ஒழுக்கச் சீலர்களாக ஆக்குவதற்கும், நாணயமுள்ளவர் களாகச் செய்வதற்கும் தான் பயன்படவேண்டும். அதில்லாமல் உத்தியோகத்திற்காகவே படிப்பு, அந்த உத்தியோகத்தில் அயோக்கியத்தனத்தை – பித்தலாட்டத்தை – செய்வதற்குச் சொல்லிக் கொடுப்பதைப் படிப்பு என்று சொல்லுவது என்றால் என்ன நியாயம்?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’