காவேரிப்பட்டணம், மார்ச் 27- கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் கழக புதிய நிர்வாகிகளாக தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்கள் கீழ் கண்டவர்களை அறிவித்தனர்.
கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக புதிய நிர்வாகிகளாக காவேரிப்பட்டணம் குண்டலப்பட்டி கிராமத் தைச் சேர்ந்த கோ. திரா விடமணி மாவட்ட தலை வராகவும், ஊற்றங்கரை பகுதி
சேர்ந்த செ.பொன்முடி மாவட்ட செயலாளராகவும், பொதுக்குழு உறுப்பினர் களாக த.அறிவரசன், கா.மாணிக்கம் ஆகியோர் களை நியமனம் செய்து உள்ளார்.
இதைத்தொடர்ந்து காவேரிப்பட்டணம் பாலக்கோடு பிரிவு சாலையில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு புதிதாக தேர்வு செய்யப் பட்டுள்ள நிர்வாகிகள் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் கதிரவன், ஒன்றிய தலைவர் செல்வம், ஒன்றிய செயலாளர் செல்வேந்திரன், மேனாள் ஒன்றிய தலை வர் சி.சீனிவாசன், மாவட்ட இளைஞரணி மேனாள் தலைவர் ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி தலைவர் சீனிமுத்து ராஜேசன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர்கள் வே.புகழேந்தி, மேனாள் ஒன்றிய அமைப்பாளர் ராஜா, இராஜேந்திரபாபு, ரமணன், சுபயோகம்,செந்தில் உள்ளிட்ட கலந்து கொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.