சென்னை, மார்ச் 27- தமிழ் நாட்டில் உள்ள 39 நாடா ளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக் கிறது. இதையொட்டி கடந்த 20ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
25.3.2024 அன்று பிர தான அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதனால் அன்றைய நாள் மட்டும் 405 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.
மத்திய சென்னை தொகுதியில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் உள்பட 9 பேர் நேற்று (26.3.2024) வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
தி.மு.க. வேட்பாளர் தயாநிதிமாறன் இன்று மனு தாக்கல் செய்கிறார். தென்சென்னை தொகுதி யில் நேற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்ச் செல்வி உள்ளிட்ட 9 பேர் மனு தாக்கல் செய்தனர். இந்த தொகுதியில் நேற்று வரை 22 பேர் மனு அளித்துள்ளனர்.
கடலூர் தொகுதியில் நேற்று காங்கிரஸ் வேட் பாளர் விஷ்ணுபிரசாத் உள்பட 6 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள் ளனர். இதுவரை 14 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். விழுப்பு ரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் நேற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியம் உள்பட 3 பேர் வேட்பு மனுத் தாக் கல் செய்துள்ளனர். இது வரை 9 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி நாடா ளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் மாற்று வேட்பாளர் சதீஷ்குமார், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ஸ்டீ பன்ராஜ் ஆகிய 2 பேர் மனு தாக்கல் செய்துள் ளனர். இதுவரை 12 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத் தக்கது.
வேலூர் தொகுதியில் நேற்று ஒரே நாளில் 12 பேர் மனு தாக்கல் செய்த னர். புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் களம் காண்கிறார். அவர் ஏற்கெனவே மனு தாக்கல் செய்து விட்டார். அவ ரது பெயர் கொண்ட 5 பேர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் சண்முகம் என்ற பெயரில் 6 பேர் போட்டியிடுகின்றனர்.
ஈரோட்டில் நேற்று 3 பேர் மனு தாக்கல் செய் தனர்.
தமிழ்நாடு முழுவதும் நேற்று வரை சுமார் 700 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். இதில், 100-க் கும் மேற்பட்டோர் பெண்கள் ஆவர். வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று (27.3.2024) கடைசி நாள் ஆகும்.
பிரதான கட்சிகளின் வேட்பாளர்களில் பெரும்பாலானோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த நிலையில் கடைசி நாளான இன்று இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்யாத பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர் களும் மனுக்களை தாக் கல் செய்ய உள்ளனர்.
பொதுவாக கடைசி நாளில் வேட்பு மனு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். பிரதான கட்சி யைச் சேர்ந்த பெரும் பாலானோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய் துள்ள நிலையில் கடைசி நாளான இன்று வேட்பு மனு தாக்கல் செய்பவர் களின் எண்ணிக்கை அதி கமாக இருக்க வாய்ப்பு இல்லை.
கூட்டம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய விரும்புவர்கள் வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நேரமான மதியம் 3 மணிக்குள் டோக்கன் பெற்றுக்கொள்ள அறி வுறுத்தப்பட்டு உள்ள னர்.
அவ்வாறு டோக்கன் பெற்றவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதற் கான நேரம் முடிவடைந்த பின்னரும் மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படு வர் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
28.3.2024 அன்று வேட்பு மனு பரிசீலனை நடக்கிறது. வேட்பு மனுக் களை திரும்பப் பெற 30ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப் பட்டு உள்ளது. அன்றைய நாள் மதியம் 3 மணி வரை மனுக்களை திரும்பப் பெறலாம்.
இதைத் தொடர்ந்து அன்றைய நாள் மாலை இறுதி வேட்பாளர் பட் டியல் வெளியிடப்படுகி றது. இதன்பின்பு, சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின் னம் ஒதுக்கீடு செய்யப் படுகிறது.
மக்களவைத் தேர்தல் இன்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிவு
Leave a Comment