ஆத்தூரில் திராவிடர் கழக தோழர்களை கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் மலையரசன் அவர்கள் 26.3.2024 அன்று காலை 10.30 மணியளவில் நேரில் சந்தித்து அனைவருக்கும் பயனாடை அணிவித்து சிறப்பு செய்து நமது தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய நீங்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து ஆவன செய்ய வேண்டும் என உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் த.வானவில் வேட்பாளர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். உடன் மாவட்ட செயலாளர் நீ.சேகர், மாநில இளைஞரணி துணை செயலாளர் ப.வேல்முருகன், சிங்கிபுரம் கூத்தன், மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.கார்முகிலன், ஆத்தூர் ஒன்றிய தலைவர் ஆ.செல்வம், மாவட்ட இளைஞரணி செயலாளர் சத்தியமூர்த்தி வீரன், மாவட்ட தொழிலாளரணி தலைவர் மோகன்ராஜ், ப.க. ஆசிரியரணி பொறுப்பாளர் இலுப்பநத்தம் கா.பெரியசாமி, மாவட்ட மாணவர் கழக செயலாளர் தோழர் ச.அஜித், காட்டுகோட்டை தங்கராஜ், ஆத்தூர் தோழர் ஆயில் கடை அருள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள்.ஆத்தூரில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தி.மு.க. வேட்பாளர் மலையரசன் கழக தோழர்களை சந்தித்தார்.
ஆத்தூரில் திராவிடர் கழக தோழர்களை கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் மலையரசன் அவர்கள் 26.3.2024 அன்று காலை 10.30 மணியளவில் நேரில் சந்தித்து அனைவருக்கும் பயனாடை அணிவித்து சிறப்பு செய்து நமது தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய நீங்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து ஆவன செய்ய வேண்டும் என உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் த.வானவில் வேட்பாளர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். உடன் மாவட்ட செயலாளர் நீ.சேகர், மாநில இளைஞரணி துணை செயலாளர் ப.வேல்முருகன், சிங்கிபுரம் கூத்தன், மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.கார்முகிலன், ஆத்தூர் ஒன்றிய தலைவர் ஆ.செல்வம், மாவட்ட இளைஞரணி செயலாளர் சத்தியமூர்த்தி வீரன், மாவட்ட தொழிலாளரணி தலைவர் மோகன்ராஜ், ப.க. ஆசிரியரணி பொறுப்பாளர் இலுப்பநத்தம் கா.பெரியசாமி, மாவட்ட மாணவர் கழக செயலாளர் தோழர் ச.அஜித், காட்டுகோட்டை தங்கராஜ், ஆத்தூர் தோழர் ஆயில் கடை அருள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள்.