திருவண்ணாமலை, மார்ச் 27- திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் சி.என். அண்ணா துரையை ஆதரித்து நேற்று (26.3.2024) திருவண்ணாமலை யில் தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் திறந்த வேனில் நின்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க.வுக்கு தூக்கம் போய் விட்டது என்று மோடி சொல் கிறார். ஆமாம் எங்களுக்கு தூக்கம் போய்விட்டது. உங் களை வீட்டிற்கு அனுப்பும்வரை நாங்கள் தூங்கப் போவது இல்லை. எங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தூக்கம் பார்க் காமல் செய்ய தான் போகி றோம். உங்களை வீட்டிற்கு அனுப்பி தூங்க வைக்கும் வரை நாங்கள் எங்களுடைய வேலையை செய்து கொண்டு தான் இருக் கப் போகிறோம்.
கடந்த 2014ஆம் ஆண்டு சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.450 ஆக இருந்தது. தற்போது ரூ.1100 ஆக உள்ளது. தற்போது தேர்தல் வருகிறது என்றதும் நரேந்திர மோடி எரிவாயு உருளை விலையில் ரூ.100அய் குறைத்து நாடகம் ஆடுகிறார். ஏமாந்து விடாதீர் கள், மீண்டும் ஜெயித்து விட்டு வந்தால் அவர் எரிவாயு உருளைக்கு ரூ.500 ஏற்றினாலும் ஏற்றுவார். ஆனால் நம்முடைய முதல்-அமைச்சர் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் 100 சதவீதம் எரிவாயு உரு ளையை ரூ.500-க்கு கொடுப் போம் என்று வாக்குறுதி அளித்துள்ளார். பெட்ரோல் 1 லிட்டர் ரூ.75-க்கும், டீசல் 1 லிட்டர் ரூ.65-க்கும் கொடுப் பேன் என்றும் தெரிவித்துள் ளார். அதுமட்டுமின்றி தமிழ் நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப் படும் என்றும் தேர்தல் அறிக் கையில் தெரிவித்து உள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப் பாடி பழனிசாமி, “உதயநிதிக்கு வேற வேலையே இல்லை. தேர்தல் வந்தாலே போதும் ஒரு கல்லை தூக்கி காட்டுகிறார்” என்கிறார். நான் சொல்லிவிட் டேன் நீங்கள் எய்ம்ஸ் மருத்து வமனையை கட்டி முடிக்கும் வரையில் அந்த கல்லை தர மட்டேன் என்று. தான் எய்ம்ஸ் கல்லை தான் தூக்கி காட்டுகி றேன். ஆனால் நீங்கள் மோடியை பார்த்தால் பல்லை காட்டுகி றீர்கள். இப்படி பல்லை காட்டி மாநிலத்தின் உரிமைகள் அனைத்தையும் அவரிடம் விட்டுக் கொடுத்து விட் டார்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், தென் மாவட்டங்களில் திரு நெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் பெருமழை பெய்தபோது, மோடி எட்டி கூட பார்க்கவில்லை. தற்போது 10 நாள்களாக தமிழ்நாட்டிற்கு தேர்தல் பிரசாரத்திற்காக வருகிறார்.
மழை பாதிப்புக்கு நாம் கேட்ட ரூ.37 ஆயிரம் கோடி யில் ஒரு பைசா கூட ஒன்றிய அரசு கொடுக்கவில்லை. நாம் 1 ரூபாய் வரியாக கொடுத்தால் அவர்கள் நமக்கு கொடுப்பது வெறும் 29 பைசா மட்டும் தான். அதனால் நரேந்திர மோடியை நீங்கள் பெயர் சொல்லி கூப்பிடாதீர்கள். இனி மேல் அவர் பெயர் மிஸ்டர் 29 பைசா. இதுதான் நாம் அவ ருக்கு வைத்து உள்ள செல்லப் பெயர். கடந்த 5 ஆண்டுகளில் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாட்டில் இருந்து ரூ.6லு லட்சம் கோடி வரி செலுத்தி உள்ளோம். ஆனால் ஒன்றிய அரசு நமக்கு வெறும் ரூ.1லு லட்சம் கோடி தான் கொடுத்து உள் ளனர். இப்படி அனைத்தி லும் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது.
-இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.