மதுரை, மார்ச் 27- இந்தியா முழுவதும் இருக்கும் நாத்திக அமைப்புகளின் கூட்டமைப்பான இந்திய நாத்திகக் கூட்டமைப்பின் பொதுச் செயலா ளர் தோழர் சுதேசு கதிராவ் 21.03.2024 அன்று ,சொந்த வேலை யின் காரணமாக மதுரைக்கு வந் திருந்தார்.
அவர் மராட்டிய மாநிலம் நாசிக் நகரத்தைச் சார்ந்தவர். அங்கு உள்ள கல்லூரியில் வேதி யியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
மதுரை கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த அவரையும் அவரது இணையரையும், திராவிடர் கழகத் தின் தலைமைக் கழக அமைப்பாளர் மதுரை வே.செல்வம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு, மாநி லச் செயலாளர் சுப.முருகானந்தம், மதுரை மாநகர் மாவட்ட திரா விடர் கழகத் தலைவர் பழக்கடை அ.முருகானந்தம், மாவட்டச் செயலாளர் இரா.லீ.சுரேசு, கவிஞர் சொ.நே.அன்புமணி ஆகியோர் நேரில் சந்தித்துப் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
அவருக்குத் தந்தை பெரியாரின் முழுமையான பணிகள் (The Collected works of Periyar) என்னும் ஆங்கிலப் புத்தகத்தையும், ஜனவரி-மார்ச் 2024 திராவிடப்பொழில் இதழும், ஆந்திராவில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரைத்தொகுப்பு (ஆங்கிலத்தில்) நூலும் அளிக்கப்பட்டது.
திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக, பகுத்தறிவு எழுத்தாளர் மன் றப்பணிகள் பற்றி வியப்போடு கேட்ட தோழர் சுதேசு கதிராவ் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள் பற்றி விசாரித்தார்.
இந்திய நாத்திக கூட்டமைப்பு இன்னும் சிறப்பாக நடைபெற என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்.
1) பல்வேறு மாநிலங்களில் இருக்கும் இந்திய நாத்திகக் கூட் டமைப்பில் இருக்கும் தோழர்கள் பங்கேற்கும் வண்ணம் மாதந் தோறும் ஓர் இணையவழி ’சூம்’ (Zoom) கூட்டம் நடத்தலாம் என் றும் அதனைப்போல பல்வேறு மாநில நாத்திகத் தலைவர்கள், தோழர்கள் எழுதியிருக்கும் நூல் களை அறிமுகம் செய்யும் வண்ணம் கூட்டம் நடத்தலாம்,இப்போது இருக்கும் நவீன அறிவியல் கருவி களைப் பயன்படுத்தலாம் என்றும் அவருக்கு கருத்துகள் கூறப்பட்டது.
2) இந்திய நாத்திக கூட்டமைப் பின் சார்பில் ஒரு மாதந்திர அல் லது மாதம் இருமுறை பத்திரிக்கை நடத்தலாம் என்ற கருத்தையும் அவருக்குத் தோழர்கள் தெரிவித்தனர்.
பல்வேறு மாநிலங்களைச் சார்ந்தவர்களுக்கு மொழி ஒரு பிரச்சினையாக உள்ளது என்றார். ஆங்கிலத்திலேயே இந்த நிகழ்வை, பத்திரிகையை நடத்தலாம் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது.
இந்திய நாத்திகக் கூட்டமைப் பின் அடுத்த அகில இந்திய மாநாடு, தமிழ் நாட்டில் நடைபெறுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த தோழர் சுதேசு கதிராவ் ஜூன் 30இல் இந்திய நாத்திகக் கூட்ட மைப்பின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் பெரியார் திடலில் நடைபெறுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
இது குறித்து பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்தலைவர் இரா.தமிழ்ச்செல்வனிடம் தொடர்பு கொண்டிருப்பதாகவும் தெரிவித் தார்.
பல கருத்துகளை பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பாகவும் நமது இயக்கம் பற்றியும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் செயல்பாடு கள் குறித்தும் அவரோடு பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பாக இந்தச்சந் திப்பு அமைந்தது.