ஒப்புக்கொண்டிருக்கிறார்!
♦பி.ஜே.பி. தொண்டர்கள் கடுமையாக உழைத்தால் ஆளுநராகக்கூட ஆகலாம்.
– தமிழிசை சவுந்தரராஜன்
>> ஓ, அப்படியா! பி.ஜே.பி.,க்காரர்கள் மட்டும்தான் ஆளுநராக முடியும் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார், பலே, பலே!
அவர் பேச்சும், அவர் கட்சியும்…
♦ என்னை தோற்கடிக்க தி.மு.க. – அ.தி.மு.க. சேர்ந்து போராடுகின்றன.
– பி.ஜே.பி., அண்ணாமலை
>> அவரை தோற்கடிக்க யாரும் தேவையில்லை. அண்ணாமலையின் பேச்சும், அவர் சார்ந்த கட்சியும் போதுமே!
சண்டை போட்டுத்தான்…
♦ கோவை தொகுதிக்குத் தேவையானதை டில்லியில் சண்டையிட்டுப் பெற்றுத் தருவேன்.
– பி.ஜே.பி., அண்ணாமலை
>> ஆக, தமிழ்நாட்டின் தேவைகளுக்கு பி.ஜே.பி. ஆட்சியிடம் சண்டை போட்டுத்தான் பெற வேண்டுமோ?