சென்னை,மார்ச் 27- தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல், ஜன., 22இல் வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு டிச., 10 முதல் இம்மாதம் 17 வரை, மொத்தம் 17.28 லட்சம் விண் ணப்பங்கள் பெறப்பட்டன.
இவற்றில், பெயர் சேர்க்கக் கோரிய 6.12 லட்சம் விண்ணப் பங்களில், 5.33 லட்சம் ஏற்கப்பட்டு, அவர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட் டன.
பெயர் நீக்கக்கோரி, 5.35 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன; அவற்றில், 4.86 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்; 26,405 விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டு, 22,806 நிலுவை யில் உள்ளன.
பெயர் திருத்தம் கோரிய 5.80 லட்சம் விண்ணப்பங்களில், 4.91 லட்சம் ஏற்கப் பட்டு, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட் டுள்ளன; 59,849 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், 29,824 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.
வாக்காளர் பட்டியலில் 4.86 லட்சம் பேர் நீக்கம்
Leave a Comment