சென்னை, மார்ச் 27– மக்களவைத் தேர் தலை யொட்டி தமிழ்நாட்டிற்கு 165 கம்பெனி துணை ராணுவப்படை வருகை தர உள்ளது என்று சத்ய பிரதா சாகு தெரிவித்தார்.
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதி காரி சத்யபிரதா சாகு தலைமைச் செயல கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
453 நட்சத்திர பேச்சாளர்களுக்கு
அனுமதி அட்டை
மக்களவைத் தேர்தலுக்கான ‘சி விஜில் செயலி’ மூலம் தமிழ் நாட்டில் இதுவரை 11,305 புகார்கள் பெறப்பட்டுள்ளன. 17 ஆயிரத்து 32 துப்பாக்கிகளை சம்பந்தப் பட்டவர்கள் காவல்துறையிடம் சமர்ப் பித்துள்ளனர். இதுவரை 453 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர்களிடம் இருந்து 17 ஆயிரத்து 800 புகார்கள் கட்டுப்பாட்டு அறைக்கு வந்துள்ளன.
தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 165 கம்பெனி துணை ராணுவப் படையினர் வருகை தர உள்ளனர். மொத்தமாக தமிழ்நாட்டில் 190 கம்பெனி துணை ராணுவப் படையினர் தேர்தல் பாது காப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் கட்சிக்கு இன்னும் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனை இந்த மாத இறுதியில் இருந்து வீடு, வீடாக விநியோகம் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம்.
-இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாட்டிற்கு மேலும் 165 கம்பெனி துணை ராணுவப் படை
Leave a Comment