கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சோனியா காந்தி, மம்தா ஆகியோருக்கு அழைப்பு

Viduthalai
1 Min Read

அரசியல்

சென்னை, செப். 24 – தி.மு.க. மகளிர் அணி சார்பில் வரும் அக்டோபர் 14-ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியின் மூத்த தலை வர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல மைச்சர் மம்தா ஆகி யோருக்கு அழைப்பு விடுக்கப்பட் டுள்ளது. 

அவர்களை தி.மு.க. துணை பொதுச் செய லாளர் கனிமொழி நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். அதே போல் கலைஞர் நூற் றாண்டு விழாவில் கலந்து கொள்ள தேசிய அளவில் மேலும் சில பெண் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *