5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச்செய்வோம்
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடிக்கு தக்க பாடம் புகட்டுவோம்!
“இந்தியா” கூட்டணியின் தென்சென்னை தொகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
சென்னை,மார்ச் 26 – ‘‘தமிழச்சி தங்கபாண்டியனை 5 லட்சம் வாக் குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பிரதமர் மோடிக்கு தக்கபாடம் புகட்டுவோம்’’ என்று தென் சென்னை மாவட்ட திமுக செயலா ளரும் அமைச்சருமான மா.சுப் பிரமணியன் ‘இந்தியா’ கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசும்போது கூறினார்.
ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் 23.3.2024 அன்று நடைபெற்ற பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்ட “இந்தியா” கூட்டணிக் கட் சிகளின் செயல்வீரர்கள் கூட்டத் தில் சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
நாடாளுமன்றத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் ஆற்றிய பணிகள்!
1967ஆம் ஆண்டு அறிஞர் பெருந்தகை அண்ணா தமிழ்நாட் டில் சட்டப்பூர்வமாக நிறைவேற் றிய சுயமரியாதைத் திருமணத்தை இந்தியா முழுமைக்கும் சட்டப் பூர்வமாக ஆக்கிட வேண்டும்என்று அவர் ஆற்றிய உரை என்பது சுயமரியாதை உள்ளவர்கள் மிகப் பெரிய அளவில் வரவேற்கிற விஷயமாகும்.
அதேபோல் ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்து ஏற்படுகின்ற இழப்புகள் குறித்து நாடாளுமன் றத்தில் ஆற்றிய உரை. பல்வேறு இடங்களில் அறியாமை கார ணமாக ஆழ்துளைக் கிணறுகள் ஏற்படுத்தப்பட்டு, அதில் சிறு வர்கள் விளையாடும்போது விழுந்துவிடுகிறார்களே, இதற்கு எதிராக பேசிய பேச்சு என்பது இளஞ்சிறார்களுக்கு இந்த சமூ கத்தில் எவ்விதப் பாதிப்பும் ஏற் பட்டுவிடக் கூடாது என்று அக்கறையோடு ஆற்றிய உரை. அதேப் போல் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் குடிநீர் பிரச்சினைக் குறித்து அவர் பேசியது.
பணி வரைமுறையின்கீழ் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி. சமூகங்களுக்கு ஆசிரியப் பணியிடங்கள் ஏற்பட வேண்டும் என்று பேசியது, தாழ்த்தப் பட்டோர் சமூகத்தவருக்கும், படித்த ஆசிரியர்களுக்கும் அவர் செய்த மிகப்பெரிய அளவிலாப் பங்களிப்பு. தமிழ்நாட்டில் இருக் கிற கடற்கரைகளையெல்லாம் அழகுப்படுத்திட வேண்டும் என்று அவர் ஆற்றிய உரை தமிழ்நாட்டின் கடற்கரைகளுக்கு அவர் செய்த மிகப் பெரிய அளவிலான பங்களிப்பு.
பெண் சிசுக் கொலைகளை இந்திய தண்டனைச் சட்டத்தில் குற்றமாகச் சேர்த்திட வேண்டு மென்று அவர் ஆற்றிய அந்த உரை என்பது பெண்கள் சமூகத்திற்கு அவர் ஆற்றிய மிகப்பெரிய அளவிலான பங்களிப்பு.
ஒன்றுக்கொன்று 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கூடு தல் சுங்கச்சாவடிகளை, 60 கி.மீட்ட ருக்கு ஒன்றுதான் டோல்கேட் இருக்க வேண்டும். 20 கி.மீ., 30 கி.மீட்டருக்குள் ஒரு சுங்கச்சாவடி இருந்து மக்களின் பணத்தைச் சுரண்டுகிறார்களே, இதை எதிர்த் துப் பேசிய ஆற்றல்மிக்க நாடாளு மன்ற உறுப்பினர்தான் மதிப்புமிக் கவர்தான் சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன்.
அதேபோல் சென்னை தெற் கில் சென்னை மாநகரில் இருக்கிற 5 இடங்களில் உள்ள சுங்கச்சாவடி களை அகற்றிட வேண்டும் என்கிற கருத்தை முன்மொழிந்து, அதைத் தொடர்ந்து தென்சென்னையில் மிகப் பெரிய அளவிலானப் போராட்டத்தை நடத்தி, want Tollgate – என்ற போராட் டத்தை நடத்தி, அன்றைய எதிர்க் கட்சித் தலைவராக இருந்த தமிழ் நாடு முதலமைச்சர் தளபதி, அன்றைக்கு சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தியைப் பதிவிட்டார்.
“Don’t want Tollgate – என்ற போராட்டத்தை தென்சென்னை இன்றைக்கு கையில் எடுத்தி ருக்கிறது. பல்லாயிரக்கணக் கானோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று முழக்கமிட்டிருக்கிறார்கள்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மாநகரின் எல்லைக்குள் இருக்கிற சுங்கச்சாவடிகளை அகற்றுவோம்” என்று சொன்னார்கள். அந்த வகையில் இந்தச் சுங்கச்சாவடிகள் சோழிங்கநல்லூரில் இருந்தாலும், மேடவாக்கம் சாலையில் இருந்தா லும், அதேப்போல் பெருங்குடியில் இருந்தாலும், இந்தச் சுங்கச்சாவடி கள் எல்லாம் இன்றைக்கு அகற் றப்பட்டு, மக்களுக்கு மிகப்பெரிய அளவிலானத் தீர்வு கிடைத்தது என்றால், அதற்கு முதன்முதலில் அடித்தளம் போட்டவர் தமிழச்சி தங்கபாண்டியன் . இப்படி ஏராள மான செய்திகளை சொல்லிக் கொண்டே செல்லலாம்.
அவர் மிகச் சிறந்த நாடாளு மன்ற உறுப்பினர். ஓயாது நமக் காகப் பணியாற்றியவர். தமிழினத் திற்காகப் பணியாற்றியவர். மொழி சிறக்கப் பணியாற்றியவர். இளைய சமுதாயத்தினருக்காகப் பணியாற்றியவர்.
குழந்தைகள் முதல் குடுகுடு கிழவர்கள் வரை தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை தமிழ் நாட்டின் முதலமைச்சர் அவர்க ளின் வழிகாட்டுதலோடு, நாடாளு மன்றத்தில் எடுத்துச்சொன்ன மிகப் பெரிய ஆளுமை தமிழச்சி தங்கபாண்டியன், மீண்டும் நம் முடைய தென்சென்னைத் தொகு தியில் களம் காணுகிறார்.
‘இந்தியா’ கூட்டணிக்கு
வெற்றி வாய்ப்பு பிரகாசம்!
பா.ஜ.க வேட்பாளராக, அறிவித்ததற்குப் பிறகு இரண்டு வேட்பாளர்கள் நாங்கள் களத்தில் நிற்பதற்கு தயாராக இல்லை என்று ஓடுகிறார்கள் என்று சொன்னால், பா.ஜ.கட்சி மிகப் பெரிய அளவில் மண்ணைக் கவ்வப் போகிறது என்பதை முன் கூட்டியே அறிந்து கொண்ட காரணத்தினால்தான் தேர்தலில் நிற் பதையே இன்றைக்கு தவிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதுகூட பரவாயில்லை.
வடகிழக்கு மாகாணங்கள் 7 இருக்கிறது. அசாம், மணிப்பூர், நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா போன்ற 7 மாநிலங்களில் மணிப் பூர், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா போன்ற மாகாணங்களில் நாங்கள் தேர்தலில் நிற்கப் போவ தில்லை என்று பா.ஜ.க.வே அதி காரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
இந்தியாவில் 36 மாநிலங்கள் இருக்கிறது. இந்த 36 மாநிலங்களில் வடகிழக்கு மாகாணங்களில் சில மாநிலங்களில் பா.ஜ.க. தேர்தலில் நிற்காது என்று அறிவித்திருக் கிறார்கள்.
அப்படியானால், பா.ஜ.கவின் தோல்விக் குறித்து முழுமையான விசயங்களை அறிந்த காரணத் தினால்தான் வருகிற தேர்தலில் சில மாநிலங்களில் நாங்கள் நிற்கவேப் போவதில்லை என்று அந்தக் கட்சி இன்றைக்கு அறிவித்திருக்கிறது. எனவே இன்றைக்கு நமக்கு வெற்றி வாய்ப்பு என்பது பிரகாசமாக இருந்துகொண்டிருக் கிறது.
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி!
தமிழ்நாட்டைத் தொடர்ந்து மோடி வஞ்சித்துக்கொண்டிருக் கிறார் என்பதற்கு பல்வேறு செய்திகளைச் சொல்ல முடியும். தமிழச்சி தங்கபாண்டியன் இங்கே பேசும்போது சொன்னார். ரூ.37 ஆயிரம் கோடி நாம் வெள்ள நிவா ரணத்திற்குக் கேட்டோம்.
ஒரு பைசாகூட தரவில்லை. ரூ.20 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. நிலு வைத் தொகை இன்னமும் தர வில்லை. மெட்ரோ ரயில் திட்டங் களுக்கான ஒன்றிய அரசின் பங்குத் தொகைத் தரவில்லை. இப்படி எல்லாத் துறைகளுக்கும் ஒன்றிய அரசின் பங்குத் தொகைகளைத் தராமல் நிறுத்தி வைத்திருக் கிறார்கள்.
சேலத்தில் நடைபெற்றக் கூட் டத்தில் நரேந்திர மோடி சொல்லி விட்டு சென்றிருக்கிறார். நாங்கள் எதற்காக நிதித் தராமல் இருக் கிறோம் என்றால், கொடுத்தால் முறையாக செலவிட மாட்டார்கள் என்பதற்காகத்தான் என்று சொல்லியிருக்கிறார்.
அப்படியானால் நிதியைத் தரவில்லை என்பதை பட்டவர்த் தனமாக ஒப்புக்கொண்டிருக்கிறார். எனக்கு முன்னால் பேசிய ஆம் ஆத்மிக் கட்சியைச் சேர்ந்த சகோதரி சொன்னார்.
இந்திய வரலாற்றிலேயே ஒரு முதலமைச்சரை கைது செய்தது என்பது இதுவரை நடந்திராத ஒன்று. கடந்த இரண்டு மாதங்களில் 2 மாநில முதலமைச்சர்களை தொடர்ந்து கைது செய்திருக்கிறார்கள்.
எனவே இப்படி ஒரு கொடுங் கோன்மை ஆட்சி இந்தியாவில் இருக்கவே கூடாது என்ற உறு தியை நாம் ஏற்க வேண்டும்.
எனவே இங்கு வந்திருப்பவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் செய்திருக்கிற சாதனைகளையெல்லாம் எடுத்துச்சொல்லி, குறைந்தது ஒருவர் 100 பேரையாவது சந்தித்து இச்சாதனைகளை விளக்கிக் கூறி, ஒரு மாத இடைவெளிக் கூட ஏப். 19க்கு இல்லை. இரண்டு வாரங்கள் இடைவெளிதான் உள்ளது.
எனவே சாதனைகளை எடுத் துச்சொல்லி தமிழச்சி தங்க பாண் டியன் அவர்களை மிகப் பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் உங் களையெல்லாம் கேட்டுக் கொள் கிறேன்.
5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்!
தமிழச்சி தங்கபாண்டியன் கடந்தத் தேர்தலில் 2 லட்சத்து 62 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு மடங்கில் வெற்றிபெற்றதைக் காட்டிலும், 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால்தான், இந்தக் கூட்டம் சிறப்பாக நடந்தது, இதில் நாம் கலந்துகொண்டோம் என் பதற்கு அர்த்தம் உண்டு.
இந்தத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றால், நமக்காக அன்றாடம் உழைத்துக்கொண் டிருக்கும் நம்முடைய கழகத் தலைவர் கரத்தை வலுப்படுத்த வேறொரு காரியம் இருக்கவே முடியாது.
அவருடைய உழைப்பிற்கு நன்றி சொல்ல, அவருடைய செயலுக்கு நாம் பாராட்டு தெரிவிக்க இவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியா சத்தில் நாடாளுமன்றத்திற்கு அனுப்புவோம் என்ற ஒன்று மட்டும்தான் வழி என்று கூறி விடைபெறுகிறேன்
-இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிர மணியன் பேசினார்.