பி.ஜே.பி.யில் இணைந்த ஒரு மணி நேரத்தில் ஒருவருக்குத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
அவர் சாதாரணமானவராக இருக்க முடியுமா? கண்டிப்பாகவே முடியாது! அப்படியானால் அவர் ஒரு தொழிலதிபராகத்தான் இருக்க முடியும். அவர்தான் ஓ.பி.ஜிண்டால் என்பவரின் இளைய மகனான நவீன் ஜிண்டால்!
இவர் இதற்கு முன் காங்கிரஸ் சார்பில் குரு க்ஷேத்திரா தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர்.
இவர் குடும்பம் நிலக்கரி ஊழலில் தொடர் புடையது. அதன் காரணமாக 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பளிக்க வில்லை. இந்த நிலையில்தான் காங்கிரஸில் இருந்து விலகி 24.3.2024 அன்று பி.ஜே.பி.யில் இணைந்தார். அவ்வளவுதான்! திடீர் ஜீபூம்பா மாதிரி பி.ஜே.பி. சார்பில் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
எப்படி இருக்கிறது பி.ஜே.பி.யின் யோக்கிய தையும், அவர்களின் நீட்டி முழங்கும் தார்மிகமும்!
பி.ஜே.பி.யின் தார்மீகம்?
Leave a comment