வியாசர்பாடி, செப். 24 – சென்னை வியாசர்பாடியில் 20.9.2023 அன்று மெகிசின்புரம் அண்ணல் அம்பேத்கர் சிலை அருகில் தந்தை பெரியார், முத்தமிழறி ஞர் கலைஞர் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் வட சென்னை மாவட்ட திராவிடர் கழக மகளிரணி மற்றும் திரா விட மகளிர் பாசறை சார்பில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் முதலாவதாக அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், தொழிலாளர் அணி மாநிலச் செயலாளர் திருச்சி சேகர் முன்னிலையில் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் மாலை அணிவித்து முழக்கமிட்டு மரியாதை செலுத்தினார்.
சமத்துவ மாணவர்களின் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. “விஷ்வகர்மா யோஜனா” திட்டம் எவ்வளவு ஆபத்தானது என்பதை நாட கமாக நடித்து காட்டி மக்களின் கைத்தட்டல்களைப் பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட மகளிர் பாசறை தோழர் யுவராணி அனைவரை யும் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் புரசை சு.அன்புச் செல்வன் கூட்டத்தின் நோக்கத்தைப் பற்றி பேசினார்.
ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன் நிகழ்வின் சிறப்புகளை எடுத்துப் பேசி னார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பூர் பகுதிச் செயலாளர் தோழர் கோட்டி சுரேஷ் தந்தை பெரியாரின் உழைப்பையும், இன்று பாசிச பிஜேபி ஆட்சியில் நடக்கும் ஒடுக்குமுறைகளைப் பற்றியும் பேசினார்.
சென்னை உயர்நீதிமன்றத் தின் பெண் வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் லூயிசால் ரமேஷ் பங்கு கொண்டு சிறப்பித்தார். வழக்குரைஞர் கோவி ராமலிங்கம் தந்தை பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனைகளை பதிவு செய்தார்.
பொதுக்கூட்டத்தின் தலைவர் வழக்குரைஞர் பா.மணியம்மை தன்னுடைய உரையில் வியாசர்பாடியில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு மக்களின் பேராதரவு உள்ளது என்றும், நான்கு பெண் பிள் ளைகளை பெற்ற தன் தந்தை கல்வி என்ற சொத்தைக் கொடுத்து, மூடநம்பிக்கையற்ற பகுத்தறிவுச் சிந்தனைகளை விதைத்து இன்று சமூகம் மதிக் கும் பெண்களாகத் தங்களை வளர்த்தார் என்றும், முத்தமிழ றிஞர் செய்த பல நலத் திட் டங்களைப் பற்றியும் பேசினார். “தகைசால் தமிழர்” என்ற விருதை தமிழர் தலைவருக்கு வழங்கிய மாணபுமிகு முதல மைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசினார். முத்தமிழறிஞர் கலைஞர் போல் வேடம் அணிந்து வந்து – பொது மக்களை ஈர்க்கும் விதத்தில் பேசினார் பெரியார் பிஞ்சு தமிழ்மாறன்.
கலை நிகழ்ச்சியில் பங்கு கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு பரிசு கொடுத்து பாராட் டப்பட்டது. கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் பரிசுகளை வழங்கினார்.
சமத்துவ மாணவர்கள்: சரோஜினி பிரியா, வினிதா, சசிரேகா, நித்யன், யாழினி, டில்லி, அய்யா – அண்ணல் பாடல்களைப் பாடிய சத்யன், திலீப், சண்டிஸ்வரன், சுதாகர், சுபாஷ், நடனம் ஆடிய விஷ்ணு, தீப்தி, சஞ்சனா, பிரியா, புகழ், டில்லி, சனாசிறீ, டாலி, அய்ஸ் வர்யா ஆகியோருக்குப் பரிசு கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் எழுச்சி யுரையாற்றினார். நீதிக்கட்சி தொடங்கி, தந்தை பெரியார், முத்தமிழறிஞர் கலைஞர் கல்வி யில் செய்த சரித்திர சாதனை களையும், இன்றைய முதல மைச்சர் கல்வியில் செய்து வரும் புரட்சிகளையும் பற்றி பேசினார். ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை, நீட், கியூட், விஷ்வகர்மா யோஜனா போன்ற பேராபத்தான திட்டங்களைப் பேசி, பெற்றோர்கள் விழிப் போடு இருக்க வேண்டும் என் றும், தமிழர் தலைவர் செய்து வரும் பண்பாட்டு சீரழிவுக்கு எதிரான முறியடிப்புப் பணி களைப் பற்றியும் மிகச் சிறப் பாக பேசி மக்களின் கரவொலி யைப் பெற்றார். இந்த நிகழ்வு சிறப்பாக அமைய பெரிய அளவில் உழைத்த பா.நிர்மலா, பால னுக்கு நன்றி கூறி சிறப்பு செய் தார்.
பங்கு கொண்டோர்:
தலைமைக் கழக அமைப் பாளர் தே.செ.கோபால், காப் பாளர் கி.இராமலிங்கம், வட சென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண் டியன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ. சுரேஷ், பெரியார் சுயமரியா தைச் திருமண நிலைய இயக் குநர் மு.பசும்பொன், தாம்பரம் மாவட்ட கழக மகளிரணி தலைவர் இறைவி, மகளிர் பாசறை த.மரகதமணி, மா. இ.தலைவர் நா.பார்த்திபன், மா.இ.செயலாளர் அரவிந்த் குமார், பா.பார்த்திபன், சி.வாசு, க.செல்லப்பன், கொடுங்கையூர், தங்கமணி – தனலட்சுமி, மு.பவானி, பா.வெற்றிச்செல்வி, வழக்குரைஞர் துரை அருண், க.கலைமணி, பழனிச்சாமி, உடுமலை வடிவேல், ஓட்டேரி பாஸ்கர், அயனாவரம் துரை, ரவிக்குமார், கண்மணி துரை, வெங்கடேசன், திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் வெ.மு. மோகன், மணிவண்ணன், இள வரசி, தாம்பரம் மோகன்ராஜ், கண்ணன், பூவிருந்தவள்ளி தமிழ்ச்செல்வன், சேரலாதன், சா,தாமோதரன், செண்பகம், வழக்குரைஞர்கள் தமிழ்ச் செவி, சையத் முஸ்தபா, உதயக் குமார், ரமேஷ், ராமச்சந்திரன், தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ரா.பார்த்த சாரதி, கண்ணதாசன் நகர் ஜீவா, தாம்பரம் சந்திரசேகர், கலையரசன், செந்தமிழ் சேகு வேரா, வழக்குரைஞர் கனக சபாபதி, கோபாலகிருஷ்ணன், 47ஆவது வட்ட தி.மு.க. செயலாளர் சீனிவாசன், வட்ட செயலாளர் தேவா, தி.மு.க. மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் தமிழ் க.அமுத ரசன், பாலமுரளி இந்திய கம் யூனிஸ்டு பாரதி, நாகராஜ், காமராஜ் மற்றும் ஏராளமா னோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.