நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில், வாக்காளர்களுக்குத் தெளிவூட்டும் வகையிலும், மீண்டும் மோடி ஆட்சி ஏன் வரக்கூடாது என்பதை விளக்கும் வகையிலும், திராவிடர் கழகத்தின் சார்பில் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் எழுதப்பட்ட “மக்கள் விரோத பா.ஜ.க. அரசை விரட்டியடிப்போம்!” என்ற நூல் தஞ்சையில் நேற்று (25.3.2024) நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் வெளியிடப்பட்டது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி வெளியிட, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பெற்றுக் கொண்டார். கழகத் தோழர்களும் வரிசையாக மேடைக்கு வந்து 50, 100 என்ற எண்ணிக்கையில் கழகத் தலைவரிடம் பெற்றுக் கொண்டனர். மக்கள் மத்தியில் இதனைக் கொண்டு செல்ல வேண்டும் என்று கழகத் தோழர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். நூல் ஒன்றின் நன்கொடை ரூ. 20 ஆகும்.