24.9.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
👉மகளிர் இட ஒதுக்கீடு 10 ஆண்டுகளுக்கு வராது ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த பிரதமர் மோடி பயப்படுவது ஏன்? ராகுல் காந்தி கேள்வி
👉இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதி நிகழ்வுகள் இனி அரசு மரியாதையுடன் மேற் கொள் ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
👉 வகுப்புவாத, ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க 2024 தேர்தலில் பா.ஜ.க. வீழ்த்தப்பட வேண்டும். சிஏஜி அறிக்கையில் வெளியிடப்பட்ட ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் பற்றி பிரதமர் மோடி இதுவரை வாய் திறக்காதது ஏன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தி டெலிகிராப்:
👉’சரோஜினி நாயுடு 1925இல் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த 100 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ். படிநிலையில் எந்தப் பெண்மணியாவது முதலிடம் பிடித்தது உண்டா? காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி.
👉 புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை மோடி மல்டி பிளக்ஸ் அல்லது மோடி மேரியட் என்று அழைக்க வேண்டும் என ஜெய்ராம் ரமேஷ் கிண்டல்.
– குடந்தை கருணா