அகில இந்திய பகுத்தறிவாளர் சங்க பொதுச்செயலாளர் மகாராட்டிர மாநிலம் நாசிக் பேராசிரியர் சுடேஷ் கதிராவ் வாழ்விணையர் சீலா சுடேஷ் கதிராவ் ஆகியோர் கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழக அலுவலகமான நாகர்கோவில் பெரியார் மய்யத்திற்கு வருகை தந்தார்கள். அவர்களுக்கு குமரிமாவட்ட கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். குமரிமாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தந்தை பெரியார் மற்றும் தமிழர் தலைவர் கி.வீரமணி ஆகியோரின் கருத்துகள் அடங்கிய ஆங்கில நூல்களை வழங்கினார். திராவிடர் கழக செயல்பாடுகளை நாசிக் பேராசிரியர் கழக பொறுப்பாளர்களிடம் கேட்டறிந்தார். கழக மாவட்டத் துணைத்தலைவர் ச .நல்ல பெருமாள் உடனிருந்தார்.
அகில இந்திய பகுத்தறிவாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பேராசிரியர் சுடேஷ்கதிராவ் கன்னியாகுமரி வருகை
Leave a Comment