ரூ.34.60 கோடியை தமிழ்நாடு அரசிடம் வசூலித்த ஒன்றிய அரசு: ஆர்.டி.அய். மூலம் அம்பலம்
மதுரை, மார்ச் 25- கரோனா காலத் தில் புலம்பெயர் தொழிலாளர் கள் 3.54 லட்சம் பேரை சொந்த ஊருக்கு அனுப்ப முழுக் கட்ட ணமாக தமிழ்நாடு அரசிடமி ருந்து, ரூ.34.60 கோடி வரை ஒன்றிய அரசின் ரயில்வே துறை வசூல் செய்திருக்கும் அதிர்ச்சித் தகவல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிவந்துள்ளது. கரோனா காலத்தில் 2020இல் பல்வேறு மாநிலங்களிலிருந்து புலம் பெயர் தொழிலாளர்கள் தங் கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல ரயில்வே துறை ‘ஷ்ரா மிக் சிறப்பு ரயில்கள்’ என்ற பெயரில் பல்வேறு வழித்தடங் களில் ரயில்களை இயக்கியது.
மிக விபரமாக மாநில அரசு அதிகாரிகள் யாரைக் கொண்டு வருகிறார்களோ, அவர்களி டம் முழுக் கட்டணம் பெற்று, அந்த பயணிகளை மட்டுமே ரயில்களில் ஏற ரயில்வே துறை அனுமதித்தது. இந்த ‘ஷ்ராமிக்’ சிறப்பு ரயில்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ரயில் பயணிகள் சங்க நிர்வாகி பாண்டியராஜா விப ரங்களை பெற்றார். அதில் பல் வேறு தகவல்கள் கிடைத்துள் ளன. கடந்த 2020, மே 1ஆம் தேதி தெற்கு ரயில்வேயிலிருந்து முதல் ரயில் எர்ணாகுளத்திலிருந்து புவனேஸ்வருக்கும், கடைசி ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து ஆக.11ஆம் தேதி பீகார் மாநிலத்தில் உள்ள தேனாப்பூருக்கும் இயக்கப்பட் டது.
தமிழ்நாட்டிலிருந்து 265 ரயில்களில் மொத்தம் 3 லட் சத்து 54 ஆயிரத்து 150 பேர் பயணித்தனர். இதற்குப் பய ணக் கட்டணமாக தமிழ்நாடு அரசு ரூ.34 கோடியே 60 லட்சத்து 93 ஆயிரத்து 845அய் ஒன்றிய ரயில்வேதுறைக்கு செலுத்தியது. இந்த ‘ஷ்ராமிக்’ ரயில்களில் 2ஆம் வகுப்பு படுக்கை வசதி கட்டணம் முன்பதிவின்றி வசூலிக்கப்பட் டது. சாதாரண பெட்டிகளுக் கான பயண கட்டணம் வசூலிக் கக் கூட ஒன்றிய ரயில்வே துறைக்கு மனமில்லை. கட் டண குறைப்போ, இலவச பயணச் சீட்டோ, முதியோர் பயணகட்டண சலுகையோ தரவில்லை.
முழுக் கட்டணத்தையும் ரயில்வே துறை தீவிரம் காட்டி தமிழ்நாடு அரசிடமிருந்து வசூலித்திருக்கிறது. தமிழ்நாட் டிலிருந்து இயக்கிய 265 சிறப்பு ரயில்களில் ஒரே ஒரு ரயிலுக்கு தான் உத்ரகாண்ட் மாநிலம் பயணக் கட்டணத்தை செலுத் தியுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து இயக்கப்பட்ட ரயில்களில் பெருந் தன்மையுடன் ஒரு ரயிலை தவிர அனைத்து ரயில்களுக்கும் கட்டணத்தை வந்தாரை வாழவைக்கும் என்ற சொல்லுக்கு ஏற்ப தமிழ்நாடு அரசு செலுத்தியது குறிப்பிடத் தக்கது.
பிற மாநிலங்களிலோ மாநி லவாரியான பயணிகள் பட்டி யல் தயாரித்து, அந்தந்த மாநி லங்களிடம் கட்டணம் பெற்று அதன்பிறகே ரயில்கள் தயார் செய்து கட்டணம் பெறப்பட்ட வர்களை அனுப்பி வைத்திருக் கின்றனர். ஆனால் ஒன்றிய அரசின் ரயில்வே துறை கட் டணம் செலுத்த கட்டாயப் படுத்திய நிலையில், தமிழ்நாடு அரசு மட்டுமே பெருந்தன்மை யுடனும், மனிதாபிமானத்துட னும் இந்த கட்டணத்தை தானே செலுத்தி அனுப்பி வைத்தது.
தமிழ்நாட்டிலிருந்து இயக் கப்பட்ட 265 சிறப்பு ரயில்கள் விபரம் வருமாறு: சென்னை சென்ட்ரல்-77, திருப்பூர்-34, கோவை-34, திருவள்ளூர்- 22, சென்னை எழும்பூர்-15, மதுரை-11, ஈரோடு-10, காட் பாடி-9, செங்கல்பட்டு-8, சேலம்-6, திருச்சி-6, திருநெல்வேலி-5, தஞ்சாவூர்-4, கன்னியாகுமரி, நாகர்கோவில், மேட்டுப் பாளையத்தில் இருந்து தலா 3 ரயில்கள், தூத்துக்குடி, ராம நாதபுரம், கரூர், திண்டுக்கல், காஞ்சிபுரத்தில் இருந்து தலா 2 ரயில்கள், நாமக்கல், விழுப் புரம், விருதுநகர், அரக்கோ ணம், ஜோலார்பேட்டையில் இருந்து தலா 1 ரயில்கள் இயக்கப்பட்டன.