பலத்த காவல் கண்காணிப்பு இருந்தும் திருப்பதி கோவிலுக்குச் சொந்தமான மின்சாரப் பேருந்து திருட்டு காப்பாற்ற முடியாத சக்தியில்லாத பெருமாள்

Viduthalai
2 Min Read

திருப்பதி, செப்.25 திருமலையில் பயன் படுத்தப்பட்டு வரும் மின்சார பேருந்தை  திருடிச் சென்றவர்கள் சார்ஜ் தீர்ந்து போனதால் அதனை காளஹஸ்தி அருகே சாலையில் விட்டுச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. அதிக அளவு கூட்டம் கூடுவதால் பலத்த பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கூடுத லாக 3,700 காவல்துறையினர், 1,200 தேவஸ்தான கண்காணிப்பு பாதுகாவ லர்கள், ஊர்காவல் படையினர், ஆக்டோபஸ் சிறப்பு ஆயுதப்படையினர் என திருப்பதி முதல் திருமலை வரை 24 மணி நேரமும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக திருப்பதி கண்காணிப்பாளர் பரமேஸ் வர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

6ஆ-ம் நாள் பிரம்மோற்சவம் 23.9.2023 அன்று நடந்தது. இதனால், திருமலையில் பக்தர்களின் வசதிக்காக சுற்றி வரும் இலவச ‘தர்ம ரதம்’ மின்சார பேருந்துகள் சார்ஜ் போட அதற்கான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதில் அனைத்து பேருந்துகளுக்கும் சார்ஜ் போட்டுவிட்டு பேருந்து ஓட்டுநர்கள் களைப்பாக ஆங்காங்கே உறங்கிக் கொண்டிருந்தனர். அந்த சமயம் பார்த்து அடையாளம் தெரியாத நபர்கள் ஒரு மின்சார பேருந்தை ஓட்டிச் சென்றனர். திருமலையில் உள்ள வாகன சோதனை மய்யத்தை அந்த பேருந்து   அதிகாலையில் 3.53க்கு தாண்டி சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவானது. ஆனால், ஏதோ பராமரிப்பு பணிக்காக திருப்பதி பணி மனைக்கு கொண்டு செல்லப்படுவதாக அங்கிருந்தவர்கள் நினைத்து விட்டனர். அதன் பின்னர் ஓட்டு நர்கள் பேருந்தை காணாததால் திருமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஜிபிஎஸ்  மூலம் காளஹஸ்தி அடுத்துள்ள நாயுடு பேட்டை எனும் இடத்தில் திருடப்பட்ட பேருந்து இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். பேருந்தை திருடிய வர்கள் சார்ஜ் தீர்ந்து போனதால், பேருந்தை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. அலட்சியமாக செயல்பட்ட அதிகாரி மற்றும் 2 ஊழி யர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட் டனர். பல ஆயிரம் காவலர்கள், சிறப்பு காவல் படைப்பிரிவு, உளவுப்பிரிவு மற்றும் நவீன கண்காணிப்பு கருவிகள் இருந்த போதும் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பேருந்தை திருடிச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *