திருவையாறு, மார்ச் 25- 21.3.2024 அன்று மாலை திருவையாறு பெரியார் பெருந்தொண்டர் மு. வடிவேலு மறைவுற்றார். பகுத்தறிவாளர் கழக மாநில செயலாளர் கபிஸ்தலம் மோகன் மூலம் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மு.வடிவேல் அவர் களின் புதல்வர்கள் டி.வி.பன் னீர்செல்வம், டி.வி.செல்வகும ரன், டி.வி. கலைச்செல்வன், மகள்கள் பொற்செல்வி, ஜெயந்தி ஆகியோர் முன்னிலையில் மு.வடிவேல் அவர்கள் இறந்த பின்னும் வாழும் வகையில் விழிக் கொடை அளிக்கப்பட்டது.
பெரியார் பெருந்தொண் டர், தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் இருவரின் மேல் மாறா அன்பு கொண்ட கொள்கையாளர், 1971இல் தொடங்கப்பட்ட வேலு சிட்ஸ் நிறுவனர், திருவையாறு தமிழிசை மன்றத்தின் தொடக்க காலம் தொட்டு தொடரும் அறங்காவலர் மு.வடிவேலு அவர்களின் இறுதி நிகழ்ச்சி, இரங்கல் கூட்டம் 22.03.2024 மாலை 3.00 மணிக்கு நடை பெற்றது.
இரங்கல் கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமை வகித்து தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் இருவரும் திருவை யாறு பகுதிக்கு வரும் போதெல் லாம் பண மாலை அணிவித்து வரவேற்கும் தனித்தன்மையை யும், பகுத்தறிவு கருத்துக்களையும், மூட பழக்க வழக்கங்களை யும் கடுமையாக எதிர்க்கும் அவரது குணநலனையும் சுட் டிக்காட்டி, திருவையாறு பகுதி யில் கழகத்தினை வளர்த்தெ டுத்த ஆப்பரேட்டர் கோவிந்த ராஜன், பழனிச்சாமி, ஆறு முகம், துரையரசன், கோதண்ட பாணி என பல்வேறு கழகத் தோழர்கள் குடும்பம் குடும்ப மாக கழக நிகழ்ச்சிகள் அனைத் திலும் பங்கேற்பு செய்யும் மாண் பிணை சுட்டிக்காட்டியும், இந்த பகுதிக்கு நமது கழகத் தோழர்கள் யார் வந்தாலும் அமர்ந்து பேசக்கூடிய ஒரு நல்ல இடமாக அவரது சிட் பண்ட்ஸ் அலுவலகம் விளங் கியதையும் சுட்டிக்காட்டி இரங்கல் உரையாற்றினார்.
திருவையாறு ஒன்றிய கழக செயலாளர் வழக்குரைஞர் துரை. ஸ்டாலின், திருவையாறு நகர பிரமுகர் ராஜராஜன், பகுத்தறிவாளர் கழக மேனாள் பொறுப்பாளர் குப்பு வீரமணி, அய்யம்பேட்டை நகர தலைவர் வே.இராவணன், தமிழிசை மன்ற பொறுப்பாளர் ராம. அசோக் குமார், தஞ்சை மாந கரத் தலைவர் பா.நரேந்திரன், தமிழக கலை பண்பாட்டுத் துறை மேனாள் இணை இயக் குனர் குணசேகரன், வடிவேலு அவர்களின் மூத்த மருமகன் ராம. செல்வராசு, மாணவர் கழக மாநில செயலாளர் இரா. செந்தூரபாண்டியன், திரு வையாறு மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் சை.வ. குமணன், கழகக் காப்பாளர் மு.அய்ய னார் ஆகியோர் இரங்கல் உரையாற்றினர்.
நிறைவாக கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக் குமார் இரங்கல் உரையில்,
தந்தை பெரியாரின் மூட நம்பிக்கை எதிர்ப்பு என்பது மக்கள் அனைவருக்கும் ஆன சுயமரியாதையை, பகுத்தறிவை காக்கும் என்றும், திராவிடர் கழகத்தின் தொண்டர்கள் துற விகளுக்கும் மேலானவர்கள் ஏனென்றால் துறவிகளுக்குத் தான் இறந்த பின்னும் ‘சொர்க் கம்’ அடைய வேண்டும் என்ற ஆசை இருக்கும். பெரியார் பெரும் தொண்டர்களுக்கு அந்த ஆசையிலும் நம்பிக்கை இல்லாமல் சமுதாய இழிவை துடைக்க பாடுபடக் கூடிய வர்கள் எனவும், பழங்கால மூடச் சடங்குகள் இந்த நவீன அறிவியல் காலத்திற்கு தேவை யற்றவை, இதனை தவிர்க்க வேண்டும். நாம் தற்கால சூழல் வளர்ச்சிக்கு ஏற்ப பழைய பழக்க வழக்கங்களை கைவிட வேண்டும்,மனித சமூக சமத் துவம் தான் தந்தை பெரியாரின் கொள்கை என்றும் இரங்கல் உரை நிகழ்த்தினார்.
திருவையாறு ஒன்றிய தலைவர் ச. கண்ணன், பேரூர் தலைவர் ஆ.கவுதமன், ஒன்றிய அமைப்பாளர் மு.விவேக விரும்பி, பேரூர் செயலாளர் மதுரகவி, பெரியார் அலி, ஒன்றிய இளைஞரணி செயலா ளர் அ.மோகன்ராஜ், ஓவியர் புகழேந்தி, அருளேந்தி, அன் பேந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூடியிருந்த கூட்டத்தை பயன்படுத்திக் கொண்டு சுயமரியாதை கருத்துக்களை கழகப் பொறுப்பாளர்கள் பேசிய விதம் நல்ல வரவேற்பை பெற்றது. இறுதி ஊர்வலம் மாலை நாலு மணிக்கு “பெரியார் பெருந்தொண்டர் வடிவேலு அவர்களுக்கு வீரவணக்கம் வீரவணக்கம் – இறந்தும் உயிர் வாழும் வடிவேல் அவர்களுக்கு வீரவணக்கம்” என்ற முழக்கத் துடன் தொடங்கி இறுதியாக திருவையாறு இடுகாட்டில் அவ ரது உடல் எரியூட்டப்பட்டது.