சங்கர் எடுத்த சிவாஜி படம் தான் சங்கிகளின் “எலக்டோரல் பாண்ட்” ஊழலுக்குக் காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் தொழிலதிபர்களை மிரட்டி, உங்கள் கருப்புப் பணத்தில் பாதியை எனக்குக் கொடுத்து விடுங்கள், இல்லையென்றால் அரசிடம் சொல்லி மொத்தப் பணத்தையும் அரசிடம் ஒப்படைக்க செய்துவிடுவேன் என்று மிரட்டுவார்.
இந்தப் படத்தைப் போலத் தான் இன்று மாபெரும் ஊழல் நிகழ்த்தப்பட்டுள்ளது. என்ன வித்தியாசம் என்றால், அந்தப் படத்தில் ரஜினி என்ற தனி மனிதர் மற்றவர்களை மிரட்டி பணம் பறிப்பார், இங்கே ஒன்றிய பாஜக அரசே அதைச் செய்துள்ளது.
ஆளும் ஒன்றிய பாஜக அரசு தேர்தல் நிதி என்கிற பெயரில் கம்பெனிகளை மிரட்டி மாமூல் வசூலித் துள்ளது.
பொதுவாக நம் தமிழ் திரைப்படங்களில் ஒரு வில்லன் இருப்பான். அவனது ஆட்கள் மார்க்கெட்டில் உள்ள அனைத்துச் சிறிய கடைகளிலும் வசூல் வேட்டையைத் தொடங்குவார்கள். பணம் இல்லை என்றால், அவர்களை அடித்து மிரட்டி பணத்தைப் பறிப்பார்கள். அவர்களை ஒரு ஹீரோ வந்து காப்பாற்றுவார்.
அதுபோலவே இன்று ஆளும் ஒன்றிய பாஜக அரசால் இந்தியா முழுவதும் உள்ள கம்பெனிகளிடம் ணிஞி – அய் வைத்து மிரட்டியும், சில கம்பெனிகளுக்கு அரசு வேலைகளை ஒதுக்கீடு செய்தும் தேர்தல் நிதி என்கிற பெயரில் வசூல் வேட்டையை நடத்தியுள் ளனர். இங்கே மக்களைக் காப்பாற்ற வேண்டிய ஒன்றிய பாஜக அரசே அந்த வில்லன் வேலையை செய்துள்ளது. எனவே எதிர்த்து எந்த ஹீரோவும் வரப் போவதில்லை. மக்களாகிய உங்களின் வாக்குகள் தான் ஹீரோ. நீங்கள் தான் உங்கள் வாக்குகளை மி.ழி.ஞி.மி.கி கூட்டணிக்கு வாக்களித்து இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும்.
– மருத்துவர் செந்தில், திட்டக்குடி