தஞ்சாவூர்,செப்.25- சிந்து சமவெளி நாகரிக ஆய்வின் மூலம் திராவிட மொழி பேசக்கூடிய நிலப் பரப்பு மிகப் பெரியது என்பது தெரிய வந்துள்ளது என்றார் சென்னை பல்கலைக்கழகத் தமிழ்த் துறை முன்னாள் தலைவர் முனைவர் வீ. அரசு.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங் கத்தில் 23.9.2023 அன்று தொடங்கிய தமிழர் தொன்மை வரலாற்றுச் சிறப்பு மாநாடு என் கிற உலகத் தமிழர் பேரமைப்பின் 10-ஆம் மாநாட்டுக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியது:
இந்தியாவில் 200 ஆண்டு கால காலனிய ஆட்சியாளர்க ளின் செயல்பாடுகளால் பல் வேறு புதிய தகவல்கள் தமிழ்ச் சமூகத்துக்கு தெரிய வந்தன. அந்த காலனியத்தில்தான் தமிழ் மொழிக் குடும்பம் என்பது தனித்த மொழிக் குடும்பம் என் பதை உறுதி செய்தது. அதற்கு முன்பு (19-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு) தமிழ் மொழி என்பது சம்ஸ்கிருத மொழியிலிருந்து பிறந்தது எனக் கூறப்பட்டு வந்தது.
இது தொடர்பாக கால்டுவெல் ஆய்வு மேற் கொண்டு, தமிழ் மொழி தனித் துவமும், தனி மரபுடையதும் என்பதைக் கூறி, அது திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந் தது என்பதையும் கண்டறிந்து தெரிவித்தார். மேலும், 1880 முதல் 1920 ஆம் ஆண்டு வரை தமிழின் செவ்விலக்கிய நூல்கள் அச்சு வடிவத்துக்கு வந்தது. இதன் மூலம், தமிழ்ச் செவ்விலக்கிய மரபு என்பது உலக செவ்விலக்கிய மரபுக்கு இணையானது என்ற கருத்தாக்கத்தை அய்ரோப்பிய அறிஞர்களும் எடுத்துக் கூறினர்.
பிரித்தானியர்கள் உருவாக்கிய தொல்லியல் கழகம் சிந்து சமவெளியில் 1800 -ஆம் ஆண்டுகளிலிருந்து ஆய்வு மேற் கொண்டு புதிய தகவல்களை வெளியிட்டு வந்தது.
இந்நிலையில், சிந்து சமவெளி நாகரிகம் என்பது பாபிலோனிய, சுமேரிய மரபில் வந்த கிரேக்க நாகரிக மரபுகளுடன் இணைந்த வகையான நாகரிகம் என 1924-இல் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் 1950-களில் இந்த நாகரிகம் திராவிட நாகரிகத்தின் கூறுகளைக் கொண்டது என்றும், இது தமிழர்களின் மர போடு தொடர்புடையது எனவும் ஹிராஸ் பாதிரியார் கூறினார்.
எனவே, குஜராத்துக்கு அப்பால் உள்ள பலுசிஸ்தானில் தொடங்கி பாகிஸ்தானின் ஒரு பகுதி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியுடன் இணைந்து தக்காண பீடபூமி, ஒடிசா பகுதியை உள் ளடக்கிய பெரும் பகுதி திராவிட மொழிக் கூட்ட மரபைச் சார்ந் தது என்ற புரிதல் வந்தது. சிந்து சமவெளி கண் டறியப்பட்டதன் மூலம் திராவிட மொழியைப் பேசக்கூடிய மக்களின் நிலம் இவ்வளவு பரந் தது என்பது தெரிய வந்தது என் றார் அரசு.
முன்னதாக, மாநாட்டுக் கொடியை உலகத் தமிழர் பேரமைப்பு துணைத் தலைவர் அய்யனாபுரம் சி. முருகேசன் ஏற்றிவைத்தார். தமிழர் தொல் வரலாற்றுக் கண்காட்சியைப் பேரமைப்பு துணைத் தலைவர் த. செயராமன் திறந்து வைத்தார். முதுமுனைவர் ஆ. சிவசுப்பிர மணியனின் உரையை தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவர் இரா. காமராசு வாசித்தார்.
மாநாட்டு மலரை பேரமைப்பு துணைத் தலைவர் சா. இராமன் வெளியிட, அதை துணைத் தலைவர்கள் டி.சி.எஸ். தெட் சிணாமூர்த்தி, த. மணிவண்ணன் உள்ளிட்டோர் பெற்றுக் கொண் டனர். மேலும், வில்லியனூர் வேங்கடேசன் எழுதிய புதுச்சேரி மாநிலக் கல்வெட்டுகளின் சொல்லடைவு என்ற நூல் வெளி யிடப்பட்டது. தொடர்ந்து கருத் தரங்க அமர்வுகள் நடைபெற்றன.
மாலையில் முனைவர்கள் வீ. அரசு, கோ. விசய வேணுகோபால், ஆ. பத்மாவதி ஆகியோருக்கும், மறைந்த முனைவர் க. நெடுஞ்செழியன், புலவர் செ. ராசுவுக்கும் உலகப் பெருந்தமிழர் விருது வழங்கப்பட்டது. இவ்விழாவில் பேரமைப்பு துணைத் தலைவர் காசி ஆனந்தன், இலங்கை நாடா ளுமன்ற மேனாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேரமைப்பு பொதுச் செயலர் ந.மு. தமிழ்மணி வரவேற்றார். நிறை வாக, செயலர் துரை. குபேந்திரன் நன்றி கூறினார்.