திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், ஆரணி பகுதியில் வசிக்கும் 13 பேர் எலுமிச்சம்பழச்சாறு அருந்தியதால் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருவதை தொடர்ந்து அவர்களை நேற்று (24.9.2023) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து பழக்கூடைகளை வழங்கி, நலம் விசாரித்து, அவர்களுக்கு அளிக்கப் படும் சிகிச்சை குறிதது மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். உடன் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.