70 ஆண்டு களுக்குப் பிறகு ஆம் ஆத்மி என்னும் கட்சி டில்லி மாநிலத்தில் ஆட்சியைப்
பிடித்தது.
அவர்கள் தமிழ்நாட்டு மாடலை முன்னுதாரணமாகக் கொண்டு ஏழைகள் படிக்கும் பள்ளியை உயர்தர கல்வி நிலையங்களாக நவீன வசதிகளோடு மாற்றினர். ஏழை மக்கள் வாழும் பகுதிகளிலேயே கல்வி கற்க, மாலை நேர தரமான பயிற்சி நிலையங்களை உருவாக்கினர்.
குடிசைப் பகுதிகளில் 12 மணிநேரம் செயல்படும் ‘‘மஹொல்லா கிளீனிக்” எனப்படும் சிறு சுகாதார நிலையங்களை உருவாக்கினர்.
ஆனால், இதை செய்த டில்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, ஓராண்டாக சிறையில். தற்போது முதலமைச்சர் கெஜ்ரிவால் சிறையில்!
‘நீ எதையும் கொடு; ஆனால், கல்வியோடு, சுகாதாரத்தையும் சாமானியர்களுக்குக் கொடுத்துவிடாதே!’ என்ற சாணக்கியனின் சூது மூளையும், மனுதர்மத்தின் பிடியும் இன்றும் உள்ளன என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு!
‘‘சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே!” என்கிற மனுதர்மத்தை இன்றளவும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கின்ற பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். கல்வியை அடித்தட்டு ஏழை மக்கள் அளவுக்கு யார் கொண்டு சென்றாலும், அவர்களைத் தங்களுக்குள்ள அனைத்து முயற்சியாலும் தடுக்க முனைவர். அதுவும் அதிகாரம் தங்கள் கையில் இருந்தால், கேட்கவே வேண்டாம்!
இவர்களை அடையாளம் காண்பீர்!
– மயிலாடன்