சென்னை மாகாண தமிழ்ச் சங்கம் அமைத்த வர்கள் இ.மு.சுவும், தந்தை பெரியாரும் ஆவர்.
1932இல் பாடநூல்களுக்கான அரசு கலைச்சொற்கள் சமஸ்கிருதமாக இருந்ததால் இதற்கு எதிர்ப்புக்கூறி 1936இல் இ.மு.சுப்பிரமணியத்தின் தலைமையில் கூடி சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்து சமஸ்கிருதச் சொற்களைத் தவிர்த்து 10.000 தமிழ்க் கலைச் சொற்களை உருவாக்கித் தந்தனர். இதன்பிறகு 1940இல் சீனிவாச சாஸ்திரிக் குழுவை அரசு நியமித்து, புதிய கலைச்சொற்களை உருவாக்க தென்னிந்திய மொழி இணைச் சொற்களின் உருவாக்கத்தின் போது திராவிட மொழிகளுக்குச் சமஸ் கிருத மொழியை அடிப்படையாகவும், உருது மொழிக்குப் பாரசீசு, அராபிய மொழிகளை அடிப்படையாகவும் எடுத்துக் கொள்ளலாம் என்றது. இதன் காரணமாக சாஸ்திரி குழுவை இ.மு.சு எதிர்த்தார். இந்நிகழ்ச்சி சுயமரியாதை இயக்கத்தில் இராமாயண, மகாபாரத் தொடர்களின் புனைப் பெயரில் எழுதியதற்கு பிறகு ஆகும்.
அக்காலகட்டத்தில் தமிழ்நாட்டில் சென்னை, தஞ்சை, திருச்சி என பல இடங்களில் சீனிவாச சாஸ்திரி குழுவின் கலைச்சொற்களுக்கு எதிராகக் கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில் இ.மு.சு தந்தை பெரியாரைச் சந்தித்து அரசின் நோக்கம் தமிழ்மொழியை உருக்குலையச் செய் வதே என்றார். இதனைத் தொடர்ந்து கோகலே மண்டபத்தில் தமிழ் அறிஞர் கழகத்தாரால் நடைபெற்ற கண்டனக் கூட்டத்திற்கு (31.08.1941) சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சர். முகமது உஸ்மான் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் தந்தை பெரியார், டி.எஸ்.நடராசபிள்ளை, ரெவரவண்ட் அருள் தங்கையா, தெ.பொ.மீனாட்சி சுந்தரம், அறிஞர் அண்ணா, மு.இராசாக்கண்ணு, கே.எம்.பாலசுப்பிர மணியம், டி.சண்முகம் பிள்ளை ஆகியோர் பேசுவதாக அறிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கலைச் சொல்லாக்கக் குழுவில் தமிழறிஞர் யாரும் இடம் பெறாதது கண்டிக்கத்தக்கது என்று எடுத்துக் காட்டப்பட்டது. இதன் விளைவாகச் சீனிவாச சாஸ்திரி குழுவில் இரா.பி.சேதுப்பிள்ளை, இ.மு.சுப்பிர மணியம், அ.முத்தையா போன்ற தமிழன்பர்கள் பின்னர் புதிதாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பொதுவாக மொழிப் பிரச்சினையில் தீவிர தூய வாதத்தை ஏற்றுக் கொள் ளாத பெரியாரே அரசாங்க முயற்சி ஆபத்தானது என உணர்ந்து விடுதலை ஏட்டில் “குதிரைக்கு முன் வண்டி” என்ற தலையங் கத்தையும் (6.7.1946) “கலைச் சொற்கள் பெயரால் தமிழ்க் கொலையா” என்ற தலையங்கத்தை (11.10.1946)யும் எழுதினார்.
(‘குடிஅரசு’ இதழில் இராமாயண ஆராய்ச்சி கட்டுரைகளை சந்திரசேகரப் பாவலர் என்ற பெயரில் தொடர்ச்சியாக எழுதியவர் இ.மு.சு.)
இ.மு.சுப்பிரமணியம் நினைவுநாள் [24.3.1975] இந்நாள் இ.மு.சுப்பிரமணியம் நினைவு நாள்.
Leave a comment