திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகத்தில் மதவெறியை வளர்க்கும் நடவடிக்கைகளைக் கண்டித்து நாளை (23.11.2023 – வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகத்தின் எதிரில் திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்ட திராவிடர் கழகம், இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, விவசாயத் தொழிலாளர் அணித் தோழர்கள் பெருமளவில் குடும்பத்துடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
– கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர், திராவிடர் கழகம்