புதுடில்லி, மார்ச் 24- டில்லி மதுபான வழக்கில் அப்ரூவராக மாறிய சரத்ரெட்டியின் நிறுவ னம் பாஜகவுக்கு ரூ.30 கோடி நன்கொடை அளித்தது தெரிய வந்துள்ளது.
கடந்த 2022 நவம்பரில் கிuக்ஷீஷீதீவீஸீபீஷீ றிலீணீக்ஷீனீணீ நிறுவனத்தின் இயக்குநர் சரத்ரெட்டி கைதான நிலையில், அதனைத் தொடர்ந்து அந்நிறுவனம் ரூ.5 கோடி மதிப்பி லான தேர்தல் பத்திரங்களை வாங்கி பாஜகவுக்கு நன்கொடை அளித்துள்ளது.
மேலும் கடந்த 2023 ஜுன் மாதத்தில் அப்ரூவராக மாறுவ தாக சரத்ரெட்டி கூறிய பிறகு, கிuக்ஷீஷீதீவீஸீபீஷீ றிலீணீக்ஷீனீணீ நிறுவனம் மேலும் ரூ.25 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கி பாஜகவுக்கு நன்கொடை அளித் ததும் தெரியவந்துள்ளது அப் ரூவராக மாறுவதாக அறிவித்த சரத்ரெட்டி தற்போது பிணை யில் வெளியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுபானக் கொள்கை விவ காரத்தில் சிக்கிய நபரிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை தேர்தல் பத்திரம் மூலம் பாஜக நன்கொடையாக பெற்றிருப்பதன் மூலம் பாஜக-வின் கொள்கை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று பலரும் கேள்வி எழுப்பியுள் ளனர்.
டில்லி மதுபான கொள்கை விவகாரத்தில் சிக்கிய நிறுவனத்திடம் இருந்து பா.ஜ.க.-வுக்கு கோடி கோடியாக தேர்தல் பத்திர நிதி
Leave a Comment