ஒருங்கிணைந்த காசநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை மய்யம் திறப்பு விழா : அமைச்சர்கள் பங்கேற்பு
சென்னை, செப்.25- முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக திருவள்ளூர் மாவட்டம், வில்லி வாக்கம் ஊராட்சி ஒன்றியம், கொள்ளுமேடு அரசு ஆரம்ப சுகா தார நிலைய வளாகத்தில் நேற்று (24.09.2023) மாநில அளவில் ‘‘காச நோய் இல்லா தமிழ்நாடு’’ எனும் இலக்கினை அடைய வட்டார அளவிலான ஒருங்கிணைந்த காச நோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை மய்யத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் பார் வையிட்டார்கள்.
அதனைத் தொடர்ந்து, காச நோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை மய்யம் தொடக்க விழா வில் 30 பயனாளிகளுக்கு தலா ரூ1,600 வீதம் மொத்தம் ரூ48,000 மதிப்பீட்டிலான காச நோய் மருந்து பெட்டகங்களையும் 30 கர்ப்பிணிப் பெண்களுக்கு தலா ரூ2,000 வீதம் மொத்தம் ரூ60,000 மதிப்பீட்டி லான ஊட்டச்சத்து பெட்டகங் களையும் அமைச்சர்கள் வழங்கி னார்கள்.
விழாவில் அமைச்சர் மா.சுப்பிர மணியன் பேசியதாவது :-
முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க, மாநில அளவில் காசநோய் இல்லா தமிழ் நாடு என்ற இலக்கினை அடைய திருவள்ளூர் மாவட்டம் கொள்ளு மேடு இன்று பகுதியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்றைக்கு வட்டார அளவிலான ஒருங் கிணைந்த காச நோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை மய்யம் என்ற புதிய திட்டம் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது.
முதன்முறையாக வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் காசநோய் கண்டறிவதற்குரிய பரிசோதனைகள், சிகிச்சைக்கான மருந்துகள் முதுலுதவிகள் உள்ள டக்கிய அனைத்து மருத்துவ சேவைகளும் ஒரே இடத்தில் ஒருங் கிணைந்து கிடைக்கிற வகையில்“Walk in centre for TB உருவாக் கப்படும் என்று கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.Walk in centre One stop TB Solution என்கின்ற வகையில் ரூ20 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் காச நோய்க் கான மூலக்கூறு அடிப்படையி லான பரிசோதனைகள் விகிதத்தை அதிகரிப்பதற்கும், அதேபோல் பரி சோதனைக்கான பொருள்கள் அனைத்தும் மருத்துவமனைகளுக் கும் குறிப்பாக வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த சோதனைக்கான வசதிகளை ஏற் படுத்தி தருவதற்கான திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட் டுள்ளது.
எனவே, Walk in centre for TB ஜிஙி உருவாக்கப்படும் என்ற அந்த அறிவிப்பு இன்று செயலாக்கம் பெறு கிறது. இந்த திட்டம் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர், சட்ட மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட் டுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரை ஏற்கெனவே ‘காசநோய் இல்லா தமிழகம் என்ற வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ச்சி யாக நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் தற்பொழுது 48 டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது. மலை கிராமங்கள் குக்கிராமங்கள் என்று எல்லா இடங்களுக்கும் இந்த வாக னங்கள் சென்று, பொதுமக்களை பரிசோதனை செய்யும் விதமாக டிஜிட்டல் எக்ஸ்ரே எடுத்து அங் கிருந்து மருத்துவமனைகளுக்கும் பரிமாற்றம் செய்து யாருக்கு காச நோய் உள்ளது என்பதை உடனடி யாக தெரிந்து கொள்வதற்காக இந்த வாகனங்கள் தற்பொழுது பயன்பாட்டில் உள்ளது. இதில் 23 வாகனங்களை 2023ஆம் ஆண்டு ஜூலை-1ஆம் தேதியன்று முதல மைச்சர் தொடங்கி வைத்தார்.
மேலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தற்போது TB Active cases என்ற வகையில் 86,000 பேர் உள்ளனர். இவர்களுக்கு மாதந்தோறும் ரூ500 வழங்கும் திட்டமும் தற்பொழுது செயல் பாட்டில் உள்ளது.
அந்த வகையில் இதுவரை ரூ16 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த 86,000 நபர்களில் பெரும் பகுதியானவர்களுக்கு மாதந் தோறும் தலா ரூ1,600 மதிப்பீட்டி லான புரதச்சத்துடன் கூடிய உணவு பெட்டகம் தன்னார்வலர் கள் மூலமாக வழங்கப்பட்டு வரு கிறது.
அந்த வகையில், 110 தன்னார்வ லர்கள் கண்டறியப்பட்டு, அவர் கள் மூலமாக இந்த பெட்டகங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வரு கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் நாள் 100 தன்னார்வலர்களுக்கு விருதுகள் தந்து அவர்களின் அளப்பரிய சாதனைகளை பாராட்டினார்கள்.
இன்று காச நோய் சிகிச்சை மய்யம் துவக்கி வைக்கப்பட் டுள்ளதைத் தொடர்ந்து, இந்தத் தொகுதியில் உள்ள காசநோயா ளிகளுக்காக மாதந்தோறும் வழங் கும் உணவுப் பெட்டகங்களுக்கு இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான திரு.சுதர்சனம் அவர்கள் பொறுப்பு ஏற்றுக் கொள்வதாகவும் இந்த மாவட்டம் முழுவதும் உள்ள 3000-க்கும் மேற் பட்ட காச நோயாளிகளுக்கு வழங் குவதற்கு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் அவர்கள் பொறுப்பேற்பதாகவும் அறிவித் துள்ளார்கள்.
இது மற்ற மாவட்டங்களுக்கு எல்லாம் ஒரு முன்னுதாரணமான செய்தியாக உள்ளது.
அந்த வகையில், இன்றைக்கு இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட் டுள்ளதால் இந்த மாவட்ட முழு வதும் உள்ள காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகப் பெரிய அளவிலான தீர்வு கிடைத் துள்ளது.
ஏற்கனவே, முதலமைச்சர் அவர்கள் திருச்சி, சன்னாசிப்பட்டி யில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காச நோய்க்காக இன்றைக்கு பல் வேறு வகைகளில் காச நோயை கண்டறிவதற்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 46 அதிநவீன கருவிகளை அன்று மருத்துவர்களுக்கு வழங்கி அன்று முதல் திருச்சியில் அவை பயன் பாட்டிற்கு வந்துள்ளன.
இப்படி காச நோய் பிரிவில், காசநோய் இல்லா தமிழ்நாடு என்று இலக்கை அடைவதற்கு பல் வேறு முயற்சிகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனங்கள் தமிழ்நாடு முழுவதும் சென்று ஆண்டுக்கு 17,000 எக்ஸ்ரே படங் களை எடுத்து பாதிப்புக்குள்ளான வர்களை கண்டறிந்து, அவர்க ளுக்கு சிகிச்சை அளிக்க உதவியாக இருந்துகொண்டிருக்கிறது.
இந்த புதிய முயற்சியை வட் டார அளவிலான ஆரம்ப சுகா தார நிலையங்களிலும் காச நோய்க் கான மருத்துவம் மருத்துவ சேவை, பரிசோதனைகள் போன்ற ஒருங் கிணைந்த சேவைகளை இங்கு தொடங்கி வைத்துள்ளோம் என்ப தில் இந்த மருத்துவத்துறை பெருமை கொள்கிறது.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார்.