சென்னை, மார்ச் 24 தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் ஏப்.1ஆ-ம் தேதி முதல் கட்டணம் உயர்கிறது.தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 63 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் கட்டணத்தை மாற்றியமைப்பது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு ஏப்.1-ஆம் தேதி முதல் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.அதன்படி, அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.
இவற்றில், ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான அனுமதி கட்டணம் ரூ.5 முதல் 20 வரையிலும், மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.100 முதல் 400 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், 20-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதம் முதல் கட்டணம் உயர உள்ளதாக நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்..
மோடியின் தேர்தல் பரிசா? தமிழ்நாட்டின் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வாம்!
Leave a Comment