சென்னை, மார்ச் 24- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு, 18-ஆவது மக்களவைத் தேர்தலிலும் ‘ஏணி’ சின் னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள் ளது. இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள முஸ்லிம் லீக் கட்சிக்கு இராம நாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற் போதைய எம்.பி. நவாஸ் கனியே மீண்டும் போட்டியிடுகிறார். இந்நிலையில், ஏற்கெனவே போட்டியிட்ட ஏணி சின்னத் தையே தங்களுக்கு மீண்டும் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம் அளிக்கப்பட்டிருந்தது. அதனைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது.