ராணிப் பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 22-03-2024 அன்று மாலை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தேர்தல் பரப்புரை நடைபெற்றது.
பழனிப்பேட்டை அண்ணா சிலைக்கு கழக மாநில ஒருங்கி னைப்பாளர் ஒரத்தநாடு இரா.குண சேகரன் மாலை அணிவித்தார்.
அதே அண்ணா சிலை அருகில் மாலை 4 மணிக்குத் தொடங்கி 6.50 வரையிலும், அவுசிங்போர்டு இந்திராகாந்தி சிலை அருகில் இரவு 7 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை யிலும் “தெருமுழக்கம், பெரு முழக்கம்” செய்து கூட்டம் தொடங்கியது.
இரு கூட்டத்திற் கும் மாவட்டத் தலைவர் சு.லோக நாதன் தலைமை வகித்தார், மாவட்ட செயலாளர் செ.கோபி, மாவட்ட அமைப் பாளர் சொ.ஜீவன்தாஸ் முன் னிலை வகித்தனர்.
அனைவரையும் நகர செய லாளர் க.சு.பெரியார் நேசன் வரவேற்றார். தலைமைக் கழக அமைப்பாளர் பு.எல்லப்பன் தொடக்க உரையாற்றினார்.
தொடர்ந்து காஞ்சி மாவட்ட தலைவர் அ.வெ.முரளி, தோழர் ரவிபாரதி,பொன்.வெங்க டேசன், காவேரிப்பாக்கம் மேனாள் தி.மு.க. செயலாளர் போ.பாண்டுரங்கன், திருவள் ளூர் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மா.மணி, மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு. இரா.குணசேகரன் உரையாற் றினர்.
கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வம் சிறப்புரையாற்றுகையில், பாசிச பா.ஜ.க.வின் பொய்முகத்தையும், அடித்த கொள்ளையையும், 120 இடங் களில் தான் பா.ஜ.க.விற்கு வெற்றி வாய்ப்பு எனவும் ஆதா ரங்களை மக்கள் கைத்தட்டி ஆர்ப்பரிக்கும் அளவிற்கு விளக்கி உரை நிகழ்த்தினார்.
மற்றும் 26ஆவது வட்ட தி.மு.க. செயலாளர் ஆர்.மோகன் ராஜ், பொருளாளர் கோவிந்த ராஜ், ராஜேந்திரபாபு, மூர்த்தி, மேனாள் நகர்மன்ற உறுப்பினர் மகேஸ்வரி, ஜிஜிஸி பாபு,நல்லாசிரியர்
சு.பாண்டியன், தி.மு.க. பகுத்தறிவு கலைஇலக்கிய பேரவை சவுந்தர், ஏ.சு.ராஜா, சிப்காட் ராஜா ஆகி யோர் கலந்துகொண்டு சிறப்பித் தனர்.
பொதுக்குழு உறுப்பினர் கோ.சூரியகுமார் நன்றி கூறினார்.அனைவருக்கும் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் மா.மணி இரவு உணவை ஏற்பாடு செய் தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் கழக சார்பில் தேர்தல் பிரச்சாரம்
Leave a Comment