நாகர்கோவில், மார்ச் 23- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக கழக நூல்கள், தந்தை பெரியார் மற்றும் ஆசிரியருடைய நூல்கள் பரப்புரை நிகழ்ச்சி நாகர் கோவில், ஒழுகினசேரி தந்தை பெரியார் மய்யத் தில் எழுச்சியுடன் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு குமரி மாவட் டத் தலைவர் மா.மு.சுப்பி ரமணியம் தலைமை தாங் கினார். மாவட்டச் செய லாளர் கோ.வெற்றிவேந் தன் முன்னிலை வகித்தார்.
பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு, மாவட்ட கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ், கழகப் பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன், மாவட்டத் துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன், மாநகர தலைவர் ச.ச.கருணாநிதி, பொன்.பாண்டியன், கோட்டாறு பகுதி தலை வர் ச.ச.மணிமேகலை தோவாளை ஒன்றிய தலைவர் மா.ஆறுமுகம் செயலாளர் ந.தமிழ் அர சன் உட்பட ஏராளமா னோர் பங்கேற்றனர். புத்தக ஆர்வலர் இராஜா இயக்க நூல்களைப் பெற் றுக்கொண்டார்.