ஆத்தூர், மார்ச் 23- தெரு முழக்கம் – பெரு முழக்கக் கூட்டம் 20.3.2024 புதன்கிழமை அன்று மாலை 6 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் நீ.சேகர் அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் த.வான வில் தலைமை யேற்று உரையாற்றினார். நூற்றாண்டு கடந்த பெரியார் பெருந் தொண் டர் ஏ.வி.தங்கவேல் மாவட்ட காப்பாளர், இரா.விடுதலை சந்திரன் மாவட்ட காப்பாளர், ஆத்தூர் நகர தலைவர் வெ.அண்ணாதுரை, காங் கிரஸ் கட்சி கிழக்கு மாவட்ட செய்தி யாளர் ஓசுமணி, சேலம் மாவட்ட பக தலைவர் வீரமணி ஆகியோர் முன் னிலை ஏற்றனர். தலைமை கழக அமைப்பாளர் அ. சுரேஷ் கருத்துரையாற்றினார்.
கூட்டத்தின் நோக் கத்தினை நேர்த்தியாக அனைவரும் பாராட் டும் வகையில் கழக பேச் சாளர் இரா.பெரியார் செல்வன் சிறப்புரையாற் றினார்
இந்நிகழ்வில் மாநில பக ஆசிரியரணி செய லாளர் வா.தமிழ்பிரபா கரன், ஆசிரியர் ச.வினோத் குமார், இளைஞரணி மாநில துணை செயலா ளர் ப.வேல்முருகன், இளைஞரணி மாவட்ட செயலாளர் சத்திய மூர்த்தி வீரன், ஆத்தூர் ஒன்றிய தலைவர் ஆ. செல்வம், புத்தி ரகவுண் டம் பாளையம் கூட.செல்வம் என ஏராள மான புதிய தோழர்கள் தங்களை அறிமுகப் படுத்திக்கொண்டு நிகழ் வில் பங்கேற்றனர்
பாசிச பாஜக ஆட்சி யின் அவலங்களை அடித்தட்டு மக்களும் தெரிந்துகொள்ளும் வகையில் பெரியார் செல்வம் பேசியதால் ஏராளமான பொது மக்கள் கூடி கூட்டத்தை கண்டு மகிழ்ச்சி அடைந் தார்கள் வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறி நிறைவு செய்தார் அ.சுரேஷ், தலைமை கழக அமைப்பாளர் சேலம், ஆத்தூர் மாவட்ட தி.க தொழிலாளரணி கலந் துரையாடல் கூட்டத் தில் மாநில தொழிலாள ரணி செயலாளர் மு. சேகர் மற்றும் தொழி லாளார் பேரவை தலை வர் கருப்பட்டி கா. சிவா ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கினர்.