அமைச்சர் பொன்முடி பிரச்சினை தக்க நேரத்தில் உச்ச நீதிமன்றம் ஜனநாயகத்தை காப்பாற்றியது

viduthalai
3 Min Read

அமைச்சர் பொன்முடி பிரச்சினை தக்க நேரத்தில் உச்ச நீதிமன்றம் ஜனநாயகத்தை காப்பாற்றியது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப் பதிவு

சென்னை, மார்ச் 23- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-
அரசியல் சட்டத்தின் பாதுகாவலரான உச்சநீதி மன்றம் சரியான நேரத்தில் தலையிட்டு, அரசியல் சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி, ஜனநாயகத்தைக் காப்பாற்றியதற்காக, தமிழ்நாடு மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த தசாப்தத்தில், இந்திய மக்கள் ஜனநாயகம் சிதைவதையும், கூட்டாட்சி வறண்டு போவதையும், மக்களால் தேர்ந்தெ டுக்கப்பட்ட இறையாண்மை கொண்ட அரசாங்கங்களின் செயல்பாட்டிற்கு முன் கூர்முனைகளை வைக்கும் தவறான சாகசங்களையும், பழமையான மரபுகளை வழங்குவதையும் கண்டனர்.
2024 தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்றவும், அரசமைப்பை நிலைநிறுத்தவும் முக்கியமானது. நமது புகழ்பெற்ற தேசத்தை நாசமாக்கி, அச்சுறுத்தும் பாசிச சக்திகளின் வெட்கக்கேடான அதிகார அத்துமீறலை தடுக்க கடுமையாகப் பாடுபடுவோம். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு பெரியார், அண்ணா, கலைஞர் வார்த்து எடுத்த பூமி – இங்கே மதவாதம் எடுபடாது
வைகோ எச்சரிக்கை

அரசியல்

திருச்சி,மார்ச் 23- திருச்சி விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று (22.3.2024) செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஜனநாயகத்திற்கும்.ஏகாதிபத்தி யத்திற்கும் இடையே நடக்கும் அறப்போர்தான் வரும் நாடாளுமன்றத் தேர்தல், ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி. ஒரே கலாசாரம் என்கிற முழக்கத்தை வைக்கும் ஸநாதன சக்திகள் கை ஓங்கி விடக்கூடாது என்பதிலேயே இந்தியா கூட்டணி வலு வாகவே இருக்கிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 இடங்களிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். இந்துத்துவா கொள்கையை ஒவ்வொன்றாக பா.ஜனதா வினர் நிறைவேற்றி வருகிறார்கள். அந்த அடிப்படையில்தான் காஷ்மீரை துண்டுதுண்டாக்கினார்கள். ஜனநாயகத்திற்கும், மதச் சார்பற்ற தன்மைக்கும், சமதர்ம கொள்கைக்கும் நேர் விரோதமான கூட்டம் இந்தியா முழுவதும் பல இடங்களில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் அவர்களால் கால் வைக்க முடியாது. இது பெரியாரின் பூமி, அறிஞர் அண்ணாவின் பூமி, கலைஞரின் வார்ப்பில் வந்த கூட்டம் உறுதியாக இருந்து போராடிக்கொண்டிருக்கிறது. இந்த தேர்தல் ஜனநாயகத் திற்கு விடப்பட்ட சவால். அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது அரசியல் காரணம்தான். பா. ஜனதா அரசு எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காகதான் இது போன்ற கைது நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
-இவ்வாறு வைகோ கூறினார்.

தேர்தலில் பிஜேபி அணி வீழும் சிறுபான்மை மக்களின் வாக்குகள் தி.மு.க. அணிக்கு விழும் மனிதநேய மக்கள் கட்சி உறுதி

தாம்பரம், மார்ச் 23- தாம்பரம் பகுதியில் மனிதநேய மக்கள் கட்சிதுணை பொதுச் செயலாளர் யாகூப் தலைமையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பி னரும், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாள ருமான அப்துல் சமது கலந்து கொண்டார். பெண்கள், குழந்தைகள் உள்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் நோன்பில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பிறகு அப்துல் சமது செய்தியாளர்களிடம் கூறுகையில், 25 கோடி இசுலாமியர்களின் எதிர்காலமே சூனியம் ஆக்கக்கூடியது இந்த குடியுரிமை திருத்த சட்டம் என்பதை உணராமல்,பா.ஜனதாவின் உத்தரவுக ளுக்கு கீழ்படக்கூடியவராக எடப்பாடி பழனிசாமி திகழ்ந்ததால் தான் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது.
தமிழ்நாட்டில் பா.ஜனதா அரசை வீழ்த்த ஒட்டு மொத்த சிறுபான்மை மக்களின் வாக்குகளும் தி.மு.க. கூட்டணிக்கு விழும் என்ற நிலை தான் உள்ளது. கோவையில் அண்ணா மலை போட்டியிட்டாலும், பிரதமர் மோடி தமிழ்நாடு முழுவதும் ‘ரோடு ஷோ’ நடத்தினாலும் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட அவர்களால் வெற்றி பெற முடியாது என கூறினார்.

தி.மு.க. தேர்தல் பிரச்சார பாடல் வெளியீடு

சென்னை, மார்ச்.23- தமிழ்நாட்டில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ‘ஸ்டாலின் தான் வராரு, விடியல் தர போறாரு என்ற தி.மு.க.வின் பிரசார பாடல் பட்டித் தொட்டியெங்கும் ஒலித்தது. தற்போது நாடாளுமன்ற தேர்தலையொட்டி ‘ஸ்டாலினின் குரல் கேட்போமா?” என்ற தலைப்பில் 3 நிமிடங்கள் 32 நொடிகள் ஓடும் தி.மு.க. பிரசாரப் பாடல் வெளியாகி உள்ளது.
‘நாமளா, அவுங்களா பார்ப்போமா, பொய் களை சாய்ப்போமா, கைகளை கோர்ப்போமா, ஸ்டாலின் குரல் கேட்போமா? என்று தொடங்கும் பாடலில், ‘நான் முதல்வன்’ திட்டம் என்று இளைஞர்கள் மனதில் ஸ்டாலின் குரல், ‘மக்களை தேடி மருத்துவம்’ என்று ஏழைகள் மனதில் ஸ்டாலின் குரல், உரிமைகளை மீட்க, தட்டி கேட்க, நீதியை காக்க, தீமையை போக்க ஸ்டாலின் குரல், பெரியார், அண்ணா பேச்சும், கலைஞரின் மூச்சும் எட்டுத்திக்கும் ஸ்டாலின் குரல்.. என்று பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளன.

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *