புதுக்கோட்டையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு
புதுக்கோட்டை, மார்ச் 23- திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் இந் தியா கூட்டணியின் வேட்பாளராக மதிமுக சார்பில் தேர்தல் களமிறங் கும் துரை.வைகோ புதுக்கோட்டை வருகை தந்தார்.
அவரை திமுக அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் மேனாள் அரசு வழக்குரைஞர் கே.கே.செல் லப்பாண்டியன், சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்து ராஜா, மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் கவிதைப்பித்தன் உள் ளிட்ட கழகத் தோழர்கள் வரவேற்று வாழ்த்திப் பேசினர்.
அப்போது மாவட்டச் செயலா ளர் கே.கே.செல்லப்பாண்டியன் பேசுகையில், மாபெரும் அரசியல் ஆளுமையான வைகோ அவர்க ளின் புதல்வன் துரை.வைகோ புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, கந்தர்வக் கோட்டை ஆகிய இரண்டு சட்ட மன்றத் தொகுதிகள் உள்ளடக்கிய திருச்சி நாடாளுமன்ற வேட்பாள ராகப் போட்டியிடுகிறார்.
ஏற்கெனவே நடைபெற்ற தேர் தலில் பெற்ற வாக்குகள் வித்தியாசத் தைவிட அதிக வித்தியாசத்தில் வெற்றிபெற அனைவரும் ஒன்றி ணைந்து பாடுபட வேண்டும்.
இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஒன்றிய அரசு அமைக்கும் போதுதான் மதவெறி பா.ஜ.கவை ஒழிக்க முடியும். தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளையும் வென்றெடுக்க பாடுபடுவோம் என் றார்.
துரை.வைகோவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளின் சார்பில் அந்தந்தக் கட்சிகளின் அலுவலகத் தில் வரவேற்பு அளிக்கப் பட்டன.
திராவிடர் கழக அலுவலகத் திற்கும் வந்தார். அப்போது அங்கு மாவட்டத் தலைவர் மு.அறி வொளி, மாவட்டத் துணைத் தலை வர் சு.கண்ணன், நகரச் செயலாளர் பூ.சி.இளங்கோ, ஒன்றியச் செயலா ளர் சாமி.இளங்கோ, ம.மு.கண் ணன் உள்ளிட்ட தோழர்கள் வர வேற்று பயனாடைகள் அளித் தனர்.
அதனைத் தொடர்ந்து மதிமுக மாவட்ட அலுவலகத்திற்குச் ணீசென்று அங்கு கட்சியினரையும் தோழர்களையும் சந்தித்து தேர்தல் பணிகள் குறித்து கேட்டறிந்தும் பணியாற்ற வேண்டிய விதங்கள் குறித்தும் விளக்கினார்.
அவருடன் தலைமைப் பொறுப்பாளர்களில் ஒருவரான ரொக்கையா, மதிமுக மாவட்டச் செயலாளர் மாத்தூர் கலியமூர்த்தி, வழக்குரைஞர்கள் சிற்றரசு, ராஜா ஆதிமூலம், மற்றும் சில மாவட்டப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்களைச் சந்தித்த போது, நான் இப்போதுதான் நான்காண்டுகளாக அரசியலுக்கு வந்திருக்கிறேன். இப்போதும் கட் சிக்காரர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி தேர்தலில் போட்டியிடு கிறேன்.
என் தந்தையின் வழிகாட்டுதல் களோடு மக்கள் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் பேசுவேன். மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வேன். திருச்சியில் மட்டுமல் லாது ஒவ்வொரு சட்ட மன்றத் தொகுதியின் தலைநகரிலும் ஒவ் வொரு நாடாளுமன்ற உறுப்பி னர்கள் அலுவலகம் திறந்து மக்க ளின் குறைகளைக் கேட்டறிந்து தீர்த்து வைப்பேன் என்றார்.