திருச்சி, மார்ச் 23- திருச்சி – திருவெறும்பூர் ஒன்றிய கழகக் கலந்துரையாடல் கூட்டம் 17.3.2024 ஞாயிறு மாலை 5 மணி அளவில் காட்டூர் காவேரி நகர் ஏழாவது தெருவில் உள்ள கல்பாக்கம் இராமச் சந்திரன் இல்லத்தில் திரு வெறும்பூர் ஒன்றிய கழகச் செயலாளர் இரா.தமிழ்ச்சுடர் தலைமை யில் நடைபெற்றது.
கலந்துகொண்ட அனைவரையும் வர வேற்ற கல்பாக்கம் இரா மச் சந்திரன் கூட்டத்தின் நோக்கங்களை விளக்கிப் பேசினார்.
ஒன்றியச் செயலாளர் தமிழர்சுடர், மாவட்ட மகளிரணித் தலைவர் ரெஜினா பால்ராஜ், சிவா னந்தம், பெல்.அசோக் குமார், சமத்துவபுரம் கணேசன், கல்பாக்கம் இராமச்சந்திரன் ஆகி யோர் உரையாற்றினர்.
கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கல்பாக்கம் இராமச் சந்திரன் தனது இல்லத் தில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரது சிலைகளின் திறப்பு விழாவை நடத்து வது பாராட்டுக்குரியது.
தமிழர் தலைவர் ஆசி ரியர் அவர்களும் முனை வர் தொல்.திருமாவள வன் அவர்களும் கலந்து கொள்ளும் அந்நிகழ் விற்கு அமைச்சர் பெரு மக்களையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் அழைப்பது எனவும் காட்டூர் தந்தை பெரியார் சிலையிலிருந்து தமிழர் தலைவரை ஊர்வலமாக அழைத்து வருவது என் றும், நிகழ்வில் பறையாட் டம், கோலாட்டம், தீச் சட்டி ஏந்துதல், அரிவாள் மேல் ஏறுதல் போன்ற மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் நிகழ்ச்சி களை நடத்துவது என் றும் தீர்மானிக்கப்பட் டது.
திருச்சி இலால்குடி துறையூர் மாவட்டத் தோழர்கள் அனைவரை யும் இணைத்து ஒரு கலந்துரையாடல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வது எனவும் காட் டூர் பகுதியில் மிகப் பெரும் திராவிடர் திருநா ளாக மாநாடு போல நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.