We have communicated our decision to withdraw from participating in the Music Academy’s conference 2024 and from presenting our concert on 25th December.
We have made this decision as the conference would be presided over by Mr. TM Krishna. He has caused immense damage to the Carnatic music world, wilfully and happily stomped over the sentiments of this community and insulted most respected icons like Tyagaraja and MS Subbulakshmi. His actions have tried to spread a sense of shame in being a carnatic musician and has been exhibited through his consistent denigration of spirituality in music.
He has vilified the Carnatic music fraternity that has collectively contri buted millions of hours of artistry, hard work and literature.
It is dangerous to overlook Mr TM Krishna’s glorification of a figure like EVR aka Periyar who
1. Openly proposed a genocide of ‘brahmins’
2. Repeatedly called/abused every woman of this community with vile profanity
3. Relentlessly worked to normalize filthy language in social discourse
We believe in a value system that respects art and artists, vaggeyakaras, rasikas, institutions, our roots and culture. We will be in moral violation if we were to bury these values and join this year’s conference.
– Ranjani & Gayatri
மியூசிக் அகாடமி 2024 மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என்ற எங்கள் முடிவை நாங்கள் தெரிவித்து விட்டோம். டிசம்பர் 25 ஆம் நாளன்று எங்கள் இசை நிகழ்ச்சியை வழங்க இய லாது என்பதையும் தெரியப்படுத்தி விட் டோம்.
மாநாடு திரு. டி.எம். கிருஷ்ணாவின் தலைமையில் நடைபெற உள்ளதால் தான் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். கர்நாடக இசை உலகிற்கு அவர் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளார். கர்நாடக இசைக் கலைஞர்களின் உணர்வுகளை புண்படுத்தியவர் அவர். தெரிந்தே செய் துள்ள இந்தத் தவறுக்காக வருந்தாமல் உள் ளூர மகிழ்ச்சியே அடைந்துள்ளார் அவர்.
பெருமதிப்புக்குரிய கர்நாடக சங்கீத மேதைகளான தியாகராசர், எம்.எஸ். சுப்பு லட்சுமி போன்றோரை அவர் இழிவுபடுத்தி யுள்ளார். கர்நாடக சங்கீதக் கலைஞராக இருப்பதே அவமானத்திற்குரியது என்று ஒரு தவறான கருத்தைப் பரப்புவது போலவே அவருடைய நடவடிக்கைகள் இருந்துள்ளன. சங்கீதத்திலும் ஒரு தெய் வீகமும், புனிதத்தன்மையும் இருப்பதை ஏற்க மறுத்தும் தொடர்ந்து இந்தக் கலையை அவர் சிறுமைப்படுத்தி வந்து உள்ளது தெளி வாகத் தெரிகிறது.
கர்நாடக இசைக் கலைஞர்கள் அனை வரும் ஒன்றிணைந்து இந்த கலைச் சேவைக்காகவே இதுவரை லட்சக் கணக்கான மணிநேரங்களை வழங்கியிருக்கக்கூடும். இசைக் கலைஞர்கள் கடுமையாக உழைத்து உள்ளார்கள். கர் நாடக சங்கீதம் சார்ந்த பல சிறந்த இலக் கியப் படைப்பு களையும் வழங்கியுள் ளார்கள். இந்தக் கலைஞர்களின் மகத்து வத்தை மதிக்காமல் அவர்களை கேவலப் படுத்திவிட்டவர் டி.எம்.கிருஷ்ணா. பெரியார் என்று அழைக்கப்படும் ஈ.வெ.ரா. அவர்களை மேம்படுத்தி புகழ் பாடி வந்துள்ளார் டி.எம். கிருஷ்ணா. இதைப் பொருட்படுத்தாமல் நாம் அலட் சியமாக இருந்து விடுவது ஆபத்தானது.
ஈ.வெ.ரா. பெரியார்,
1. பிராமணர்கள் இனப்படுகொலை செய்யப்பட வேண்டும் என்று வெளிப் படையாகச் சொன்னவர்.
2. பிராமணச் சமுதாயப் பெண்கள் அனைவரையும் தொடர்ந்து வசைபாடி இழிவுப்படுத்தி வந்தவர் அவர்.
3. தரக்குறைவான, ஆபாசமான வார்த்தைகளை பொதுக்கூட்ட உரைகளில் தொடர்ந்து பயன்படுத்தி, அதை எல் லோரும் சாதாரண மாக எடுத்துக் கொள்ள வைத்தார் அவர்.
அவரை டி.எம்.கிருஷ்ணா போற்றிப் புகழ்ந்து வருகிறார்.
நம் பண்பாடு கலைகளையும், கலை ஞர்களையும் பெரிதும் மதிக்கும் வாழ்க்கை நெறியாகும். வாத்தியக்காரர்கள், இசைக் கருவி வல்லுனர்கள், ரசிகர்கள், கலாநிலை யங்கள் – போற்றப்படும் சமூகம் நம்முடை யது. உன்னதமான கர்நாடக இசையின் வேர்களையும், அந்தக் கலையின் பாரம் பரியத்தையும் மதிப்பவர்கள் நாம். இவற் றையெல்லாம் அழியாமல் பாதுகாக்கும் தார்மீகப் பொறுப்பு நமக்கு உள்ளது. நம் கலாச்சாரச் சிறப்புகளை நாமே குழி தோண்டிப் புதைத்து விடலாமா? இந்த ஆண்டு நடைபெறவுள்ள மாநாட்டில் நாம் கலந்து கொண்டால் அந்தத் தவறைச் செய்தவர்களாகத்தான் இருப்போம். அந்த நிகழ்வில் பங்கேற்றால் நமது தார்மீக பொறுப்பை மீறியவர்களாகி விடுவாம்.
– ரஞ்சனி & காயத்ரி