* சென்னை தியாகராயர் அரங்கில் கடந்த 8.9.2023 அன்று நடைபெற்ற நடிகமணி டி.வி. நாராயணசாமி நூற்றாண்டு விழாவில் வெளியிடப்பட்ட, ”நடிகமணி டி.வி. நாராயணசாமி வாழ்க்கை வரலாறு”, ”நூற்றாண்டு விழா மலர்” ஆகிய இரு புத்தகங்கள் பெரியார் ஆய்வு நூலகத் திற்கு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் ஜி. இராமகிருஷ்ணன் கொடுத்தார். முன்னதாக இவர், விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்ததற்காக ஆசிரியருக்கு பூங்கொத்து வழங்கியும், ஆடையணிவித்தும் சிறப்பு செய்தார். உடன் உறவினர்கள். (20.09.2023, சென்னை).
* கள்ளக்குறிச்சி மாவட்டக் காப்பாளர் மா.சுப்பராயன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் ரூ.500 நன்கொடை வழங்கினார். (சென்னை, 20.9.2023)
* குவைத் நாட்டைச் சேர்ந்த ச. மணிவாசகன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து பெரியார் படம் பதித்த நினைவுப் பரிசு வழங்கி, மதிமுக சார்பில் பெரியார் பெண்கள் கல்வி பணிக்காக ரூ. 5000 நன்கொடையாக வழங்கினார். (21.09.2023, சென்னை)
* ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப.கமலக்கண்ணன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து தான் தொகுத்த புத்தகங்களை வழங்கினார். உடன் நாமக்கல் ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சி.வேணுகோபால், முனைவர் பட்ட ஆய்வாளர் அ.க.இளவேனில். (21.09.2023, சென்னை).
* கழக பொதுக்குழு உறுப்பினர் கோ. திராவிடமணி, விடுதலை ஓராண்டு சந்தா ரூ.2,000/-, பெரியார் பிஞ்சு ஓராண்டு சந்தா ரூ. 600/- என மொத்தம் ரூ. 2,600/- அய், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் ஓசூர் மாவட்டத் தலைவர் வனவேந்தன். (22.09.2023, சென்னை).
* சோழிங்கநல்லூர் மாவட்ட துணைத் தலைவர் வேலூர் பாண்டு அவர்களின் 67ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் உண்மை 1 ஆண்டு சந்தா ரூ.900 வழங்கினார்.உடன் வழக் குரைஞர் கொரட்டூர் வே. பன்னீர்செல்வம், ஜெயராமன். (22.09.2023, சென்னை)
* அரக்கோணம் திராவிடர் கழகத் தோழர்,
கு. சோமசுந்தரம் மகன் சோ. தமிழினியன் மருமகள் த.சாந்தினி இருவரும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1,000 வழங்கினர். உடன் சோமசுந்தரம். (சென்னை, 17.09.2023).