டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்வது குறித்து ஆளுநர் ரவிக்கு 24 மணி நேரம் கெடு: சட்டம் தெரியாதா? அரசமைப்புக்கு எதிராக செயல் படுவதா? உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தேர்தல் பத்திரங்கள் வாயிலாக ஆளும் பாஜ கட்சி சுமார் ரூ.8,250 கோடி வரை நன்கொடை பெற்றுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தேர்தல் பத்திரங் களின் எண்கள், தேதி உள்ளிட்ட முழு விவரங்களையும் பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் ஆணையத்திற்கு நேற்று வழங்கியது. அந்த விவரங்கள் உடனடியாக தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
* வாட்ஸ் அப் மூலமாக பாஜக அனுப்பிய ’விக்சித் பாரத்’ எனும் பெயரிலான மோடியின் கடிதங்களை உடனே நிறுத்திட தேர்தல் ஆணையம் உத்தரவு.
* டில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது அமலாக்கத்துறை
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஒன்றியத்தில் “சர்வாதிகார அரசாங்கத்தை தூக்கி எறிய வேண்டிய நேரம் இது” என்று அரவிந்த் கேஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் எக்ஸ் தளத்தில் பதிவு.
* அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் மோடி அரசுக்கு கண்டனம். தேர்தல் தோல்வி பயம் காரணமாக மோடி அரசு எதிர்க்கட்சிகள் மீது பழிவாங்கும் படலத்தை துவக்கியுள்ளதாக குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்:
* காங்கிரஸ் மீது வருமானவரித்துறை நடவடிக்கை ரூ.14.40 லட்சம் வரவுக்கு ரூ.285 கோடி முடக்கம். காங்கிரஸை நிதி ரீதியாக முடக்க பாஜக மற்றும் பிரதமர் மோடியின் திட்டமிட்ட சதி என சோனியா காந்தி கடும் தாக்கு.
* “போலி மற்றும் பொய்யான” சமூக ஊடக இடுகை களைத் தடுக்க பத்திரிகை தகவல் பணியகத்தின் கீழ் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவை உருவாக்கும் மோடி அரசின் அறிவிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை. சுதந்திர மான பேச்சுரிமையை தேர்தல் நேரத்தில் தடுக்கும் என கருத்து.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 22.3.2024
Leave a Comment