திருவையாறு, மார்ச் 22- திருவையாறு வேலு சிட்பண்ட்ஸ் நிறுவனர் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் மு.வடிவேலு (வயது-91) வயது மூப்பின் காரணமாக நேற்று (21-.3-.2024) மாலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்
அவரது இரு விழிகளும் மதுரை அரவிந்த் கண் மருத்துவ வங்கிக்கு கபிஸ்தலம் பெரியார் சேவை மய்யம் மூலம் கொடையாக வழங்கப்பட்டது. நிகழ்வினை தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர் சிங், பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வி.மோகன், திருவை யாறு வழக்குரைஞர் ஸ்டாலின் ஆகியோர் முன்னின்று நிகழ்த் தினர்.
திருவையாறு,விளாங்குடி சாலை சின்னம்மாள் நகர் அவர் களது இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் 22-.03.-2024 மாலை 3 மணி அளவில் புறப்படுகிறது.
அவருக்கு டி.வி.பன்னீர்செல் வம், டி.வி.செல்வகுமாரன், டி.வி. கலைச் செல்வன் ஆகிய மகன்களும் பொற்செல்வி, ஜெயந்தி ஆகிய மகள்களும் உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கழகப்பொறுப்பா ளர்கள் இறுதி மரியாதை செலுத் தினர். தொடர்புக்கு: மகன் டி.வி.செல்வக் குமரன் 9976092246, 94866 34888
திருவையாறு வடிவேலு மறைவு – விழிக்கொடை
Leave a Comment