அ.தி.மு.க. – பா.ஜ.க. உறவு முறிவு குறித்து தமிழர் தலைவர் ஆங்கில ஊடகத்தின் கேள்விக்கு பதில் அளித்தார்.
ANI: The Chief minister of TamilNadu has said that ADMK is the slave of BJP. Now the alliance break up has come from ADMK. How do you comment on the decision taken byADMK?
Asiriyar: It is a good question. Whether it is permanent or temporary? Whether it is judicial separation or official divorce? This question is very important. For them going back and coming again is an ordinary thing. It creates the news value, that’s all!
தமிழாக்கம்:
ஏ.என்.அய்:தமிழ்நாட்டு முதலமைச்சர் அ.தி.மு.க.வை பா.ஜ.க.வின் அடிமை எனக் கூறுகிறார். இப்பொழுது பா.ஜ.க.வுடனான கூட்டணி முறிவு பற்றிய அறிவிப்பினை அ.தி.மு.க. வெளியிட்டுள்ளது. இது பற்றிய தங்கள் கருத்து என்ன?
ஆசிரியர்: இது ஒரு நல்ல கேள்வி. இந்த கூட்டணி முறிவு நிலையானதா? தற்காலிகமானதா? நீதிமுறைப் பிரிவா? விவாகரத்தா? இது முக்கியமானது. அ.தி.மு.க.வைப் பொறுத்த அளவில் பிரிந்து செல்வதும், திரும்ப இணைவதும் ஒரு சாதாரண விடயம். இது பத்திரிகைகளுக்குக் கிடைத்த ஒரு செய்தி மட்டுமே!