சென்னை, செப். 26 – இந்தியாவில் மில்லியன்கணக்கான இணையர் கள் கருத்தரித்தல் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில், இணையர்கள் இப்பிரச்சினை களை சமாளித்து பெற்றோராக உதவும் மேம்பட்ட மற்றும் தனிப் பயனாக்கப்பட்ட கருவுறுதல் சிகிச் சைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத் துவது இன்றியமையாதது. பலர் கருவுறுதல் சிகிச்சையை தாமதப்படுத்துகிறார்கள்.
ஏனெனில் கருத்தரித்தலில் வயதின் எதிர்மறையான விளைவு களைப் பற்றி அவர்கள் அறிந்திருக் கவில்லை.
சென்னையை சேர்ந்த ஒயாசிஸ் கருவுறுதல் மய்யம், மேம்பட்ட கருவுறுதல் சிகிச்சைகளை வழங்கு கிறது-. இதற்கான விழிப்புணர்வு நிகழ்வில் பேசிய கருவுறுதல் சிகிச்சை மருத்துவ நிபுணர் டாக் டர் அபர்ணா, டாக்டர் ஹேமா, டாக்டர் டி.மகேஸ்வரி ஆகியோர் கூறுகையில், தம்பதிகள் ஒரு ஆண்டுக்குப் பிறகும் கருத் தரிக்க முடியாவிட்டால், கருவு றுதல் நிபுணரை அணுகுவது அவசியம்.
கருத்தரித்தல் அல்லது கருவு றுதல் சிகிச்சைகளை ஒத்தி வைப் பது பாதிப்புகளை உருவாக்கும். வயது அதிகரிப்பதனால் பெண் களின் கருமுட்டை இருப்பு குறை கிறது.
கருத்தரிப்புக்கு முந்தைய ஆலோசனைகளை பெறுவது தம் பதியர் கருத்தரிப்பு வாய்ப்புகளின் அடிப்படையில் அவர்கள் எந்த இடத்தில் நிற்கிறார்கள் என்பதை அறிய உதவும்.
மலட்டுத் தன்மையும் மற்ற உடல் நலப்பிரச்சினைகளைப் போலவே ஆகும்.
எனவே அச்சம் மற்றும் தடைகளை வெல்வது முக்கியம். விந்தணு குறைபாடு கொண்ட ஆண்களும் தந்தையாவதற்கான மேம்பட்ட தொழில் நுட்பங்கள் எங்களிடம் உள்ளன.
இணையரின் வயது, உடல்நலம், வாழ்க்கைமுறை, எடை மற்றும் பிற காரணிகளின் அடிப்படையில் தனிப்பயனாக்கப்பட்ட கருவுறு தல் சிகிச்சைகள் மூலம், இணை யர்கள் பெற்றோராக உதவுகிறோம்.
புற்றுநோயாளிகள் கூட கருத் தரிக்க உதவும் கருவுறுதல் பாது காப்பு நுட்பங்களை நாங்கள் வழங்குகிறோம் என்று தெரிவித்துள்ளார்.